எம்பிவி காருக்கு என்ஜாய் என நாமகரணமிட்ட ஜெனரல் மோட்டார்ஸ்

Chevy Enjoy
செவர்லே பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கும் தனது புத்தம் புதிய எம்பிவி காருக்கு என்ஜாய் என்று ஜெனரல் மோட்டார்ஸ் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டோ இன்னோவாவை குறிவைத்து பல புதிய எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் மாடல்கள் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. மாருதி எர்டிகா, நிசான் இவாலியா, ஜெனரல் மோட்டார்ஸின் புதிய செவர்லே எம்பிவி ஆகியவை விரைவில் மார்க்கெட்டில் களம் புக காத்திருக்கின்றன.

இந்த புதிய மாடல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருந்த புத்தம் புதிய எம்பிவிக்கு காருக்கு பெயர் எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எம்பிவி காருக்கு தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் பெயர் சூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய எம்பிவிக்கு என்ஜாய் என்று அந்த நிறுவனம் பெயர் சூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. 7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த புதிய செவர்லே எம்பிவி கார் ரூ.6 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய எம்பிவி முதலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகப்படுத்த ஜிஎம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரவும் அந்த நிறுவனம் முடிவு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
General motors new MPV has christined as Enjoy, says media reports. The new mpv will be falled in sub 6 lakh category.
Story first published: Friday, January 27, 2012, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X