ஒரே காரை பெயரை மாத்தி விற்கும் மாருதி, டொயோட்டா! ஆனா யார் கம்மியான விலையில் விக்கறாங்க தெரியுமா?
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor). இது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சுஸுகி நிறுவனத்துடன் டொயோட்டா நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களை, டெயோட்டா நிறுவனம் அதன் பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. அப்படி டொயோட்டா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான் அர்பன் க்ரூஸர் டைசர்.

இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,521 டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,470 டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 51 டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 2.06 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.25 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12.39 லட்ச ரூபாயாக இருக்கிறது. இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை விட சற்று விலை உயர்ந்தது ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.85 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 11.98 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கார்கள்தான். ஆனால் மாருதி சுஸுகி பிராண்டில் சற்று விலை குறைவாகவும், டொயோட்டா பிராண்டில் சற்று விலை அதிகமாகவும் கிடைக்கிறது. சரி, டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காருக்கு வருவோம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில், க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், டில்ட் & டெலஸ்கோபிக் ஸ்டியரிங், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் வாட்ச் கனெட்டிவிட்டி, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.
அத்துடன் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில் வழங்கப்படுகின்றன. எனவே உங்களால் நம்பிக்கையுடன் இந்த காரை இயக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








