மஹிந்திரா பொலிரோவை விட ரெண்டரை லட்சம் குறைவான விலையில் 7 பேர் போற கார்! மாருதி எர்டிகாவிற்கும் செக்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிஸான் க்ராவைட் (Nissan Gravite) கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டெலிவரி (Delivery) பணிகள், அடுத்த மாதத்தில் இருந்து (மார்ச்) தொடங்குகின்றன. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன.

அதற்கு முன்னதாக, இந்தியா முழுவதும் உள்ள நிஸான் டீலர்ஷிப்களுக்கு, க்ராவைட் கார்கள் தற்போது வர தொடங்கியுள்ளன. இது நிஸான் க்ராவைட் காருக்காக காத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக இருந்தாலும் கூட, ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.

Nissan Gravite Seats

இதில், ஜேபிஎல் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, முன் மற்றும் பின் பகுதியில் ட்யூயல் டேஷ்கேம், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்துடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் இருக்கை போன்ற வசதிகளும், நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் தவிர நிஸான் க்ராவைட் காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை.

Nissan Gravite MPV

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், பிரேக் அஸிஸ்ட் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை (Engine Option) நிஸான் க்ராவைட் கார் பெற்றுள்ளது. 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு வசதிகள் நிரம்பிய நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8.94 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக நிஸான் க்ராவைட் கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் க்ராவைட் காரில், மொத்தம் 7 பேர் பயணம் செய்ய முடியும். எனவே மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio Classic) ஆகிய கார்களுக்கு எல்லாம் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் 7 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக உள்ளது.

இந்த வரிசையில் 9 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப விலை 12.98 லட்ச ரூபாயாக இருக்கிறது. எனவே மேற்கண்ட கார்களுக்கு எல்லாம், மிகவும் விலை குறைந்த மாற்று ஆப்ஷனாக, நிஸான் க்ராவைட் உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 24, 2026, 15:16 [IST]
English summary
Nissan gravite 7 seater mpv arrives at showrooms check all details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+