வாகன விற்பனையில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் ஜிஎம்

General Motors Car
வாகன விற்பனையில் டொயோட்டோ, வோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய வாகன விற்பனையாளராக அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2010 ம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் விஸ்வரூபம் எடுத்து ஜெனரல் மோட்டார்சை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட காரணங்களால் டொயோட்டோவின் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனால், அந்த நிறுவனத்திற்கு பின்னால் இருந்த வோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் வாகன உற்பத்தியில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க போட்டா போட்டியில் இறங்கின.

இந்த நிலையில், வாகன விற்பனையில் வோக்ஸ்வேகன், டொயோட்டோவை பின்னுக்குத் தள்ளி கடந்த ஆண்டு கார் உற்பத்தியில் ஜிஎம் உலகின் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 9.03 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்து, வோக்ஸ்வேகன் 8.16 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஆனால், முதலிட்டத்தில் இருந்த டொயோட்டோ இரு இடங்கள் பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் மொத்தமாக 7.9 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
American auto major General Motors has became the world’s largest automaker by selling 9.03 million vehicles in 2011 around the world. It has surpassed Japanese auto major Toyota and German auto giant Volkswagen in terms of global sales.
Story first published: Friday, January 20, 2012, 15:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X