கார் நிறுவனங்களின் கணிப்புகள், கனவுகளை பொய்யாக்கிய 2011

Car Sales
கடந்த 2010ம் ஆண்டில் கார் விற்பனை வரலாறு காணாத அளவில் 31 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த ஆண்டு கார் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெறவில்லை. கடந்த ஆண்டு கார் விற்பனை வெறும் 4.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக பொருளாதார சரிவுக்கு பின்னர் கடந்த 2010ம் ஆண்டு கார் விற்பனை யாரும் எதிர்பாராத வகையில் உச்சத்தை தொட்டது. 2010ல் நாட்டின் கார் விற்பனை 31 சதவீதம் வளர்ச்சி கண்டது. கார் நிறுவனங்களுக்கு 2010ம் ஆண்டு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்த ஆண்டாக அமைந்தது. மேலும், 2011ம் ஆண்டும் இதே அளவுக்கு விற்பனை ஏற்றம் பெறும் என்று நிறுவனங்கள் கணித்தன.

கடந்த ஏப்ரல் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்)2011ல் கார் விற்பனை 16 சதவீதம் வளர்ச்சி பெறும் என்று கணிப்பு அறிக்கை வெளியிட்டது.

ஆனால், அடுத்தடுத்து உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை கார் விற்பனையை நேரடியாக பாதித்துவிட்டது. அத்தோடு மட்டும் நிற்காமல், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 13 முறை வட்டி விகிதங்களை உயர்தியதால் கார் கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்தது.

இதன் எதிரொலியால் முதன்முதலாக கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் தங்களது கார் கனவை கலைத்துவிட்டு பைக்குகள் பக்கம் கவனத்தை திருப்பிவிட்டனர். இதுபோன்று பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு கார் விற்பனை வெகுவாகவே குறைந்துவிட்டது.

கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் 18.7 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு கார் விற்பனை சிறிதளவு மட்டுமே உயர்ந்து 19.5 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 2010ம் ஆண்டை ஒப்பிடுகையில், வெறும் 4.3 சதவீதமே விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனத்தின் மானேசர் ஆலையில் கடந்த ஆண்டு தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப்போராட்டத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டதும் கார் மார்க்கெட் வளர்ச்சியில் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.

மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று கருதப்படுவதால், இந்திய வாடிக்கையாளர்கள் கார் வாங்கும் மனப்பான்மையை மாற்றிக்கொண்டதும் கார் விற்பனையில் தொடர்ந்து மந்தமாகவே இருக்கிறது.

இருப்பினும், வரும் மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய கார் மார்க்கெட் மீண்டும் நன்கு வளர்ச்சி பெறும் என்று மார்க்கெட் நிபுணர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

Most Read Articles
English summary
The Indian car market whicch was once considered the fastest growing market has hit the brakes in 2011. After recording a mammoth growth of 31 per cent in 2010, the Indian car market has managed a small growth of4.3 per cent in 2011. Some of the reasons for this slowdown are the increase in bank interest rates and fuel prices, economic uncertainty in Europe and the US, slow economic growth, labour unrests at Maruti Suzuki and a reduced demand for cars in general.
Story first published: Monday, January 16, 2012, 13:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X