ஜெனிவா மோட்டார் ஷோவில் கன்வெர்ட்டிபில் இவோக் எஸ்யூவி அறிமுகம்

Evoque convertible
பெரும் ஆவலைத் தூண்டிய ரேஞ்ச்ரோவர் இவோக் கன்வெர்ட்டிபில் எஸ்யூவி முதன்முறையாக ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உலகின் இந்த முதல் பிரிமியம் கன்வெர்ட்டிபில் எஸ்யூவி பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில்தான் ரேஞ்ச்ரோவர் இவோக் பிரிமியம் எஸ்யூவியை லேண்ட் ரோவர் அறிமுகப்படுத்தியது. ஆனால், மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்பே விற்பனையில் சாதனை படைத்தது. உலக அளவில் 20,000 இவோக் புக்கிங் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இவோக் எஸ்யூவியின் கன்வெர்ட்டிபில் மாடலையும் லேண்ட் ரோவர் வடிவமைத்துள்ளது. பிரிட்டனில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்ட உலகின் முதல் கன்வெர்ட்டிபில் எஸ்யூவியான இந்த புதிய மாடல் ஆட்டோத்துறையினர் மத்தியிலும், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் ஆவலைத்தூண்டியது.

இந்த நிலையில், நேற்று துவங்கிய ஜெனிவா மோட்டார் ஷோவில் ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியின் கன்வெர்ட்டிபில் மாடலை லேண்ட்ரோவர் பார்வைக்கு வைத்துள்ளது. டிசி100 டிஃபென்டர் கான்செப்ட் மாடல், டிஸ்கவரி மற்றும் இவோக் கன்வெர்ட்டிபில் ஆகிய 3 மாடல்களை ஜெனிவாவில் லேண்ட்ரோவர் பார்வைக்கு வைத்துள்ளது.

ஆனால், இவோக் கன்வெர்ட்டிபில் எஸ்யூவீயை சற்றித்தான் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கன்வெர்ட்டிபில் இவோக் எஸ்யூவியை உடனடியாக உற்பத்தி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று லேண்ட் ரோவர் தெரிவித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை பொருத்து உற்பத்தி குறித்து முடிவு செய்ய லேண்ட் ரோவர் திட்டமிட்டுள்ளது.

இவோக் கன்வெர்ட்டிபில் எஸ்யூவியில் 4 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் திறந்து மூடும் வசதி கொண்ட டாப் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக லேண்ட்ரோவர் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Land Rover has showcased its strongest ever product portfolio on the first day of the 2012 Geneva Motor Show. In addition to the brand's 2012 lineup, three special vehicles highlighted the breadth and strength of the Land Rover brand – the 1,000,000th Land Rover Discovery, the DC100 Defender Concept vehicle and for the first time in public, the Range Rover Evoque Convertible Concept.
Story first published: Wednesday, March 7, 2012, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X