கன்வெர்ட்டிபிள் இவோக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் லேண்ட் ரோவர்

Evoque convertible
அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் ரேஞ்ச்ரோவர் இவோக் எஸ்யூவியின் டாப் இல்லாத (கன்வெர்ட்டிபில்) மாடலை லேண்ட் ரோவர் அறிமுகப்படுத்துகிறது.

டாடா மோட்டார்ஸ் கீழ் இயங்கும் பிரிட்டனை சேர்ந்த லேண்ட் ரோவர் நிறுவனம் பிரிமியம் எஸ்யூவிகளுக்கு பெயர் போனது. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவி சர்வதேச மார்க்கெட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

விற்பனைக்கு வருவதற்கு முன்பே உலக அளவில் 18,000 புக்கிங்குகளை பெற்று அசத்தியுள்ளது இவோக் எஸ்யூவி. இந்த நிலையில், ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியின் திறந்து மூடும் கூரை (கன்வெர்ட்டிபிள்) கொண்ட மாடலை ஜெனிவா மோட்டார் ஷோவில் லேண்ட் ரோவர் அறிமுகம் செய்கிறது.

உலகின் முதல் பிரிமியம் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவி இதுதான் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் புதிய இவோக் கன்வெர்ட்டிபிள் மாடலின் சோதனை ஓட்டங்கள் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளன.

புதிய இவோக் கன்வெர்ட்டிபிள் எஸ்யூவியில் 4 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மடங்கி விரியும் வசதி கொண்ட கூரை மட்டும் 80 கிலோ எடை கொண்டது.

அடுத்த மாதம் ஜெனிவா மோட்டோர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இவோக் கன்வெர்ட்டிபில் மாடல் தற்போதே கார் பிரியர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வாங்கிய ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியின் கன்வெர்ட்டிபில் மாடல்தான் ஜெனிவா ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Land Rover has made a startling disclosure by announcing the development of the world's first convertible SUV. The carmaker will unveil the Evoque convertible at the forthcoming Geneva Motor Show
Story first published: Monday, February 27, 2012, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X