ரூ.500 கோடியை முதலீடு செய்யும் மஹிந்திரா டூவீலர்ஸ்

Mahindra Stalio
இருசக்கர வாகன மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெறுவதற்கு மஹிந்திரா வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்குகிறது. இதற்காக, அந்த நிறுவனம் ரூ.500 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் மஹிந்திரா, இருசக்கர வாகன மார்க்கெட்டில் மட்டும் பின்தங்கியுள்ளது. கற்ற வித்தைகளையும் போட்டு காட்டியும், பிற நிறுவனங்களுடன் அந்த நிறுவனம் போட்டி போட முடியாமல் தவித்து வருகிறது.

ஸ்கூட்டர்களை மட்டுமே தற்போது விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் விரைவில் தொழில்நுட்ப கோளாறால் விற்பனை நிறுத்தப்பட்ட ஸ்டாலியோ பைக்கை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், இருசக்கர வாகன மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுவதால், புதிய மாடல்களை அணிவகுக்க வேண்டிய கட்டாயத்தில் மஹிந்திரா இருக்கிறது.

எனவே, புதிய மாடல் வடிவமைப்பு, ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.500 கோடியை புதிதாக முதலீடு செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீடு மூலம் சந்தையில் ஓரளவு நல்ல இடத்தை பிடிக்க முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

வரும் 2015-16ம் ஆண்டுக்குள் 12 புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர இந்த புதிய முதலீட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவு நிறுவனத் தலைவர் அனூப் மாத்தூர் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
India's largest utility vehicle manufacturer, Mahindra has not been successful enough in the two-wheeler business. The company had to withdraw its Stallio motorcycle due to technical glitches.
Story first published: Tuesday, May 22, 2012, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X