கடும் கிராக்கி: எக்ஸ்யூவியின் உற்பத்தியை 6 மடங்கு உயர்த்தும் மஹிந்திரா!

Mahindra XUV 500
மார்க்கெட்டில் நிலவும் கடும் கிராக்கியையடுத்து, புதிய எஸ்யூவியின் உற்பத்தியை 6 மடங்கு உயர்த்த மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திராவின் புதிய எக்ஸ்யூவி 500 எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.

முதல் கட்டமாக 8,000 எக்ஸ்யூவி 500 புக்கிங் செய்யப்பட்ட நிலையில், வரும் 25ந் தேதி முதல் மீண்டும் புதிய எக்ஸ்யூவிக்கான புக்கிங் துவங்கப்பட உள்ளது. 10 நாட்களுக்கு மட்டும் நடைபெற உள்ள இந்த புக்கிங்கில் 7,200 புக்கிங்குகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இதனிடையே, புதிய எக்ஸ்யூவிக்கு மார்க்கெட்டில் இருக்கும் தேவையை கருத்தில்க்கொண்டு புதிய எக்ஸ்யூவியின் உற்பத்தி திறனை 6 மடங்கு வரை உயர்த்த மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயிலுள்ள சகன் ஆலையில் தற்போது மாதத்திற்கு 500 எக்ஸ்யூவி 500 உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாதத்திற்கு 3,000 என்ற அளவில் புதிய எக்ஸ்யூவியின் உற்பத்தியை கூட்டுவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், தேவையை சமாளித்து வாடிக்கையாளர்களின் காத்திருப்பு காலத்தை வெகுவாக குறைக்க முடியும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Mahindra to ramp up the XUV 500 production by 6 times more than current capacity. The XUV 500 is overwhelming response in the market. So mahindra has decided to ramp up XUV 500 production to cater the demand.
Story first published: Wednesday, January 18, 2012, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X