மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங்: 10 நாட்கள் மட்டும் நடக்கிறது

Mahindra XUV 500
வரும் 25ந் தேதி முதல் மஹிந்திராவின் புதிய எஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங் துவங்கப்பட உள்ளது. இந்த இரண்டாம் கட்ட புக்கிங் 19 நகரங்களில் 10 நாட்கள் மட்டுமே நடக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுகம் செய்ய்பபட்டு முதல் 10 நாட்களில் 8,000 எக்ஸ்யூவி 500 புக்கிங் செய்யப்பட்டது.

உற்பத்தி நெருக்கடியை கருத்தில்க்கொண்டு புதிய எக்ஸ்யூவி 500க்கு புக்கிங்கை மஹிந்திரா திடீரென நிறுத்தியது. இது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 4 மாதங்களுக்கு பின் வரும் 25ந் தேதி முதல் அடுத்த மாதம் 3ந் தேதி வரை மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு இரண்டாம் கட்டமாக புக்கிங் நடக்க இருக்கிறது. 10 நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த புக்கிங்கில் 7,200 புக்கிங்குகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக புக்கிங் செய்யப்பட்டால், குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களின் பதிவு மூப்பை தேர்வு செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதற்காக,டெலாய்ட்டி தொமட்சூ இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தை மஹிந்திரா நியமித்துள்ளது.

குலுக்கலில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. முதல் கட்ட புக்கிங்கில் சென்னை உள்பட நாட்டின் 5 மாநகரங்களி்ல் மட்டும் புக்கிங் நடந்தது. ஆனால், இரண்டாம் கட்ட புக்கிங் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உள்பட 19 நகரங்களில் நடைபெற உள்ளது.

புக்கிங் நடைபெற உள்ள நகரங்கள் விபரம்:

சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், புனே, ஐதராபாத், கோல்கட்டா, ஆமதாபாத், சண்டிகர்/பஞ்சகுலா,லூதியானா, ஜலந்தர்,பாட்டியாலா, கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், கோயம்புத்தூர், நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய நகரங்களில் புக்கிங் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mahindra & Mahindra Ltd. (M&M), India’s leading SUV manufacturer, today announced that it will open the second phase of bookings for the hugely successful XUV500, for a limited period of 10 days only, starting 25th January 2012. The bookings for the XUV500 will now extend to 19 cities in India
Story first published: Tuesday, January 17, 2012, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X