ரூ.1,700 கோடியில் புதிய டீசல் எஞ்சின் ஆலை: மாருதி அறிவிப்பு

Maruti Swift
டீசல் கார்களுக்கான தேவையை நிறைவு செய்யும் விதத்தில், டெல்லி அருகேயுள்ள குர்கானில் புதிய டீசல் எஞ்சின் உற்பத்தி ஆலையை மாருதி கட்டுகிறது. இந்த புதிய ஆலையை ரூ.1,700 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி நிறுவனம், எதிர்கால தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, குஜராத்தில் புதிய கார் ஆலையை அமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தற்போது குர்கானில் புதிய டீசல் எஞ்சின் தயாரிப்பு ஆலையை கட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. பட்ஜெட்டில் டீசல் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் இந்த திட்டத்தை இதுவரை ஒத்திப்போட்டிருந்தது மாருதி.

பட்ஜெட்டில் தற்போது டீசல் கார்களுக்கு ஸ்பெஷல் வரி எதுவும் விதிக்கப்படாததால் தனது டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை தூசி தட்டியுள்ளது மாருதி. அடுத்த ஆண்டு இந்த புதிய ஆலையில் டீசல் எஞ்சின் தயாரிப்பு பணிகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 3 லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் திறனை மாருதி பெற்றிருக்கும். இந்த புதிய ஆலையின் மூலம் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்களிலும் டீசல் எஞ்சின் மாடல்களுடன் மாருதி அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki, India's largest carmaker has finally decided to invest Rs 1,700 crore to set up a diesel engine unit at its Gurgaon facility with a total annual production capacity of three lakh units by 2013. It was also decided to ramp up investment by Rs 900 crore at its upcoming R&D centre in Rohtak. The crucial recommendation was approved by the company's Board of Directors in a meeting held today.
Story first published: Monday, March 26, 2012, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X