கார்களின் விலையை ரூ.17,000 வரை உயர்த்திய மாருதி

ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி கடந்த மாதம் பெரும்பாலான கார் நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தன. ஆனால், மாருதி உள்ளிட்ட சில முன்னணி கார் நிறுவனங்கள் மட்டும் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை.
இந்த நிலையில், தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் 0.3 சதவீதம் முதல் 3.4 சதவீதம் உயர்த்துவதாக மாருதி இன்று அறிவித்துள்ளது. இதில், ஸ்விப்ட் டிசையர் காரின் விலையையும் மட்டும் அந்த நிறுவனம் உயர்த்தவில்லை.
இதனால், மாருதி கார்களின் விலை மாடலுக்கு தக்கவாறு ரூ.2,400 முதல் ரூ.17,300 வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயரும் என்பது குறித்து மாருதி இதுவரை தகவல் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








