டிசம்பரில் மாருதி கார் விற்பனை 7.1 சதவீதம் சரிவு

Maruti Alto K10
பல்வேறு புதிய கார் நிறுவனங்கள் வருகை உள்ளிட்ட காரணங்களால் மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை தொடர்ந்து 7 வது மாதமாக சரிவு கண்டது. கடந்த மாதமும் அந்த நிறுவனத்தின் விற்பனையில் 7.1 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் மாருதி நிறுவனத்தின் நிலைமையே வேறு. நாட்டில் விற்பனையாகும் இரண்டு கார்களில் ஒரு கார் மாருதி நிறுவனத்தின் கார் என்ற நிலை.ஆனால், தற்போது அந்த நிலைமை தலைகீழாகிவிட்டது.

தொழிலாளர் வேலை நிறுத்தம், பெட்ரோல் விலை உயர்வு, சந்தை போட்டி பல்வேறு காரணங்களால் மாருதியின் கார் விற்பனை கடந்த சில மாதங்களாக கணிசமாக சரிந்து வருகிறது.

மேலும், முதன்முறையாக கார் வாங்குபவர்களின் முதல் சாய்ஸ் மாருதி கார்தான். இந்த நிலையில், கார் கடன் வட்டி உயர்வால் முதன்முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு பெரிதும் சரிந்து போனது.

இதனால், கார் மார்க்கெட்டில் பாதி இடத்தை பிடித்து வைத்திருந்த மாருதி தற்போது அந்த இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் 99,225 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் தற்போது 92,161 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதை ஒப்பிடுகையில் 7.1 சதவீதம் அந்த நிறுவனத்தின் விற்பனை சரிவு கண்டுள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki car sales declined in last month 7.1 percent. The company's sales has declined seventh consecutive month.
Story first published: Monday, January 2, 2012, 13:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X