வரும் 19ந் தேதி பி கிளாஸ் காரை அறிமுகப்படுத்த பென்ஸ் ஆயத்தம்

B Class
போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் வகையில், வரும் 19ந் தேதி தனது பி கிளாஸ் ஹேட்ச்பேக் காரை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகப்படுத்துகிறது.

சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்த பென்ஸ் படிப்படியாக மூன்றாம் இடத்துக்கு சென்று விட்டது. இதையடுத்து, மீண்டும் முதலிடத்தை நோக்கி பயணிக்க தேவையான முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதற்கு சரியான ஆயுதமாக தனது பி கிளாஸ் ஹேட்ச்பேக் காரை கையிலெடுத்துள்ளது. சமீபத்தில் பி கிளாஸ் கார் அராய் சோதனை மையத்தில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டன.

அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என்று தகவல்கள் தெரிவித்தன. சொகுசு கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரப் போகும் மிகக் குறைந்த விலை ஹேட்ச்பேக் கார் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், பி கிளாஸ் காரை வெகு முன்கூட்டியே பென்ஸ் அறிமுகப்படுத்துகிறது. வரும் 19ந் தேதி பி கிளாஸ் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது பென்ஸ். இதனால், சொகுசு கார் மார்க்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இந்த காரின் பெட்ரோல் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின்கள் 109 பிஎச்பி மற்றும் 204 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். டீசல் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின்கள் 122பிஎச்பி மற்றும் 204 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

பென்ஸ் களமிறக்கும் பி கிளாஸ் காருக்கு போட்டி கொடுக்க ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய போட்டியாளர்கள் கையில் ஆள் இல்லை . எனவே, அந்த நிறுவனங்களுக்கு அதிக நெருக்கடி ஏற்படும் என்று தெரிகிறது. ரூ.20 லட்சத்தில் பி கிளாஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mercedes-Benz has started the countdown for the launch of what is going to be its cheapest model in India - the B-Class. Mercedes Benz had earlier announced that it would be launching the B-Class premium car in 2012 and the German carmaker's Indian website now has a count down of the number of days left for the new car's launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X