நம்பர் 1 இடத்தை பிடிக்க ரூ.350 கோடியை முதலீடு செய்யும் பென்ஸ்

Mercedes Benz SLS Roadster
இதுவரை ரூ.650 கோடி வரை முதலீடு செய்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் புதிதாக ரூ.350 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், 5 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த பிரிமியம் கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவை தனக்கு முக்கியமான சந்தையாக தொடர்ந்து அறிவித்து வருகிறது. மேலும், சொகுசு கார் மார்க்கெட்டில் இருந்த முதலிடத்தில் இருந்த தன்னை பிஎம்டபிள்யூ நிறுவனம் கீழே பிடித்து இறக்கியதை அந்த நிறுவனத்தால் ஜீரணிக்க முடியவில்லை.

இதனால், மீண்டும் முதலிடத்தை பிடித்தே தீருவேன் என்று ஒற்றை காலில் சபதம் எடுத்துக்கொண்டு அதற்கான பணிகளை பென்ஸ் முடுக்கி விட்டுள்ளது. முதலிடத்தை பிடிப்பதற்காக 5 புதிய கார் மாடல்களை அடுத்த 2 ஆண்டுகளில் அந்த நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

மேலும், மஹாராஷ்டிர மாநிலம் சகனில் உள்ள தனது ஆலையில் கார் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய மாடல்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கத்திற்கும் ரூ.350 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த புதிய முதலீடு மூலம் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.1,000 உயரும். மேலும், புதிய முதலீடு மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
German premium car manufacturer Mercedes-Benz will be investing a whopping Rs.350 crores in its plant in Chakan, Maharashtra to boost production capacity. Benz is keen to capitalize on its image in India and launch several new models that will help it compete against BMW and Audi.
Story first published: Thursday, February 16, 2012, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X