மைக்ரா, சன்னி பெட்ரோல் கார்களின் விலை உயர்வு விபரம்

Nissan Micra
மைக்ரா மற்றும் சன்னி பெட்ரோல் கார்களின் விலையை நிசான் நிறுவனம் ரூ,3,000 முதல் ரூ.12,000 வரை உயர்த்தியுள்ளது. நாளைமுதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் சென்னையில் ஆலை அமைத்து கார் விற்பனை செய்து வருகிறது. மைக்ரா பிரிமியம் ஹேட்ச்பேக் காரை முதலில் களமிறக்கிய அந்த நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது சன்னி செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

பெட்ரோல் சன்னியை முதலில் அறிமுகப்படுத்திய நிசான், மார்க்கெட்டின் நிலவரத்திற்கு ஏற்ப கடந்த மாதம் டீசல் மாடல் சன்னியையும் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், மைக்ரா மற்றும் சன்னி பெட்ரோல் கார்களின் விலையை 0.56 சதவீதம் முதல் 2.09 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

இதனால், குறைந்தபட்சம் ரூ.3,000 முதல் அதிகபட்சம் ரூ.12,000 வரை நிசான் கார்களின் விலை உயர்கிறது.

இதுகுறித்து நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிமினோபு டொகுயாமா கூறியதாவது:

உற்பத்தி செலவீனம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் கார்களின் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று. ஆனால், வாடிக்கையாளர்களின் நலன் கருதி சிறிதளவு மட்டுமே கார்களின் விலையை உயர்த்தியுள்ளோம்.

சரியான விலையில் நாங்கள் வழங்கிவரும் சர்வதேச தரமிக்க தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் இப்போது போன்று தொடர்ந்து ஆதரவு வழங்குவர் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

சன்னி பெட்ரோல் காரின் மூன்று வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சன்னி டீசல் காரின் விலையை நிசான் உயர்த்தவில்லை.

நிசான் கார்களின் விலை உயர்வு விபரம்

மாடல் புதிய விலை உயர்த்தப்பட்ட தொகை

மைக்ரா எக்ஸ்இ(பெட்ரோல்) : ரூ.4,13,500 ரூ.3,000

மைக்ரா எக்ஸ்எல்(பெட்ரோல்) : ரூ.4,75,500 ரூ.3,000

மைக்ரா எக்ஸ்வி(பெட்ரோல்) : ரூ.5,41,300 ரூ.3,000

மைக்ரா எக்ஸ்எல்(டீசல்) : ரூ.5,84,970 ரூ.12,000

மைக்ரா எக்ஸ்வி(டீசல்) : ரூ.6,29,300 ரூ.12,000

சன்னி எக்ஸ்இ(பெட்ரோல்) : ரூ.5,83,000 ரூ.5,000

சன்னி எக்ஸ்எல்(பெட்ரோல்) : ரூ.6,93,000 ரூ.5,000

சன்னி எக்ஸ்வி(பெட்ரோல்) : ரூ.7,73,000 ரூ.5,000

Most Read Articles
English summary
Nissan Motor India Pvt. Limited announced today that prices of its best selling Diesel and Petrol versions of Micra and September-launched Sunny Petrol will be increased by 0.56 per cent to 2.09 per cent from January 20, 2012. Prices of all three variants of Petrol Micra will go up by Rs.3, 000 while prices of both variants of Diesel Micra will go up by Rs. 12, 000. 
Story first published: Friday, January 20, 2012, 13:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X