நிசான் லீப்... முழுக்க முழுக்க ஓர் எலக்ட்ரிக் கார்-சிறப்பு பார்வை

Nissan Leaf
பெரும் முதலீ்ட்டில் நிசான் நிறுவனம் உருவாக்கியுள்ள எலக்ட்ரிக் கார்தான் லீஃப். கடந்த ஆண்டு பல்வேறு ஆட்டோ கண்காட்சிகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட லீஃப் சிறந்த எலக்ட்ரிக் கார் என்ற சிறப்பை பெற்றது.

தனது தாயகமான ஜப்பான் மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் லீஃப் கார் இதுவரை 20,000 உரிமையாளர்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மைக்ரா, சன்னியை தொடர்ந்து இந்தியாவில் லீஃப் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் முனைப்பில் நிசான் இருக்கிறது. இதற்கான சாதக பாதக அம்சங்கள் குறித்து அந்த நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.

ஒரு முழுமையான பேட்டரி காராக இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பில் எல்லோருக்கும் முன்பே நிசான் லீப் எலக்ட்ரிக் பற்றிய சிறப்பு பார்வையை வழங்குகிறோம்.

'ஜீரோ எமிஷன்' என்று கூறப்படும் சுற்றுச்சூழலுக்கு அறவே மாசு ஏற்படுத்தாத வகையில் எலக்ட்ரிக் காராக லீஃப் காரை நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ளது நிசான்.

5 பேர் தாராளமாக பயணம் செய்யும் வகையில் வெகு கவர்ச்சியாகவே உள்ளது லீஃப். சக்தியை விரயம் செய்யாமல் முன்பக்கம் காற்றை எளிதாக விலக்கிக்கொண்டு செல்லும் வகையில் ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பில் லீஃப் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹூண்டாய் ஐ20 காரின் முகப்பையும் நினைவூட்டுகிறது.

பொதுவாக எலக்ட்ரிக் கார் வடிவமைப்பில் ஓர் சவாலான விஷயம், காரின் பெரும்பாலான இடத்தை பேட்டரி பிடித்துக்கொள்ளும். இதனால், இடவசதியில் நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

ஆனால், நிசான் நிறுவனம் புத்திசாலித்தனமாக லீப் காரில் பேட்டரிகள் அனைத்தையும் காரின் கீழ்பாகத்தில் வரிசையாக பொருத்திவிட்டது. இதனால், கேபின் அதிக இடவசதிகொண்டதாக மிக விசாலமாக இருக்கிறது.

லீஃப் காரில் 110 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 7 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 175 கிமீ வரை செல்ல முடியும் என்பதுதான் லீஃப் காரின் மிகப்பெரிய பலம்.

நீண்டதூர பயணங்கள் செல்லும்போது பயன்படும் வகையில் ஸ்பீடு சார்ஜ் போர்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போர்ட்டின் உதவியால் அரைமணி நேரத்தில் போதுமான சார்ஜ் செய்ய முடியும்.

தவிர, பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் போன்று மைலேஜை பற்றி கூறும்போது, லிட்டருக்கு 80 கிமீ என்ற அளவில் மைலேஜ் தருவதாக நிசான் கணக்கிட்டு கூறுகிறது.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட லீஃப் மணிக்கு அதிகபட்சம் 144 கிமீ வரை செல்லும் திறன் வாய்ந்தது.

லீஃப் காரில் ஏராளமான நவீன வசதிகள் கிடைக்கின்றன. ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் என அடுக்கிக்கொண்டே செல்லலாம். ரியர் பார்க்கிங் கேமராவும் இருக்கிறது.

மேலும், இதன் டேஷ் போர்டு மிக மிக கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்பீடோ மீட்டரில் மென்மையான வண்ண விளக்குகள் அலங்கரிக்கின்றன.

ரைடிங் குவாலிட்டியில் லீஃப் சபாஷ் போட வைக்கிறது. மேலும், கார் செல்லும்போது கேபினில் துளிகூட சப்தமில்லை. சாலைகளில் லீஃப் செல்லும்போது வெறும் காற்று மட்டும் நம்மை வருடி செல்கிறது. சப்தம் துளிகூட வரவில்லை.

கார் வருவதை பாதசாரிகள் அறிந்து கொள்ளும் வகையில் லீஃப் எலக்ட்ரிக் காரில் எக்ஸ்ட்ரா சப்தம் வரும் வகையில் நிசான் வடிவமைத்துள்ளது.

ஒரு உருப்படியான எலக்ட்ரிக் கார் என்று எளிதாக கூறத்தக்க லீஃப் தற்போது ரூ.11.40 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
English summary
Japanese car maker Nissan evaluvating to launch of the Leaf electric car in India. The Full and fully electric technology Leaf is most wanted car in Japan and European markets. Here are given Leaf features and specifications.
Story first published: Wednesday, January 4, 2012, 12:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X