டீசல், பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் டாடா மான்ஸா - சிறப்பு பார்வை

Tata Manza Hybrid
பொதுவாக இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட கார்கள் பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையில் இருக்கும். ஆனால், டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் மான்ஸா செடான் கார் கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது.

முதன் முதலாக டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த என்ட்ரி லெவல் செடான் காரான மான்ஸா டீசல் ஹைபிரிட் கான்செப்ட் மாடல் எதிர்கால மார்க்கெட்டில் நிச்சயம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கணித்து கூறுகின்றனர்.

எஞ்சின்:

மான்ஸா ஹைபிரிட் கார் 1.5 லிட்டர் டிகோர் டீசல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காரில் நவீன தொழில்நுட்பம் கொண்ட லித்தியம் அயான் பேட்டரியை கொண்டிருக்கும்.

குறைந்த தூர பயணங்களுக்கு பேட்டரியிலும், நீண்ட தூர பயணங்களுக்கு டீசல் எரிபொருளிலும் இயங்கும் கான்செப்ட்டை கொண்டு இந்த காரை வடிவமைத்துள்ளது டாடா.

இந்த கார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு 90கிராம் கார்பன் புகையை மட்டுமே வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாப்/ஸ்டார்ட் தொழில்நுட்பம்:

ஆற்றலை மிச்சப்படுத்தி கார்பன் புகையை கட்டுப்படுத்தும் ஹைஸ்பீடு கிராங்கிங், ரீஜெனரெட்டிவ் பிரேக்கிங், ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பங்களை இந்த கார் கொண்டிருக்கும்.

மேலும், மான்ஸா ஹைபிரிட் காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்க வடிவமைப்பு மாடர்ன் லுக்கை தரும் வகையில் முற்றிலும் மாற்றி வடிவமைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். பை-ஸினான் ஹெட்லைட்டுகள், எல்இடி டேஞ்சர் விளக்குகள், புதிய கிரில் ஆகியவற்றுடன் புதுப்பொலிவு கொண்டதாக மான்ஸா இருக்கும்.

கார் கதவை திறந்து மூடுவதற்கு டச் சென்சார் தொழில்நுட்பமும் மார்க்கெட்டுக்கு புதிதாக இருக்கும். ஹைபிரிட் மான்ஸாவை பழைய மான்ஸாவிலிருந்து தனித்து காட்டும் விதமாக 17 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கும். 205/45 ஆர்17 வகை டயர்கள் எளிதில் சுழலும் தன்மை கொண்டவை என்பதால் ஆற்றல் விரயத்தை தவிர்க்கும்.

லித்தியம் அயான் பேட்டரி:

நவீன தொழில்நுட்பம் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி காரின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் செல்கள் மூலம் ரீசார்ஜ் ஆகிவிடும். இந்த காரில் ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு ஆக்சஸெரீஸ்களாக கிடைக்கும்.

முன்பக்க கண்ணாடியில் ஸ்பெஷல் கோட்டிங்:

மேலும், காரின் முன்பக்க கண்ணாடியில் ஹைட்ரோஃபோபிப் நானோ கோட்டிங் பூச்சு பூசப்பட்டிருக்கும் என்பதால், கண்ணாடியில் அதிக தூசு படியாது என்பதுடன், வைப்பர் இயங்கும்போது கண்ணாடியில் கீறல்கள் விழாது.

உள்பக்கம்:

புதிய வடிவமைப்பில் சென்ட்ரல் கன்சோல், அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் லெதர் இருக்கைகள் ஆகியவை மான்ஸா மதிப்பை உயர்த்தும். எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ டிரான்ஸ்மிஷன், எலக்ட்ரிக் அஸிஸ்ட் பவர் ஸ்டீயரிங், 7 இஞ்ச் டச் ஸ்கிரீனுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் ஹைபிரிட் மான்ஸாவின் கூடுதல் சிறப்புகளாக இருக்கும்.

இந்த டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆடியோ, நேவிகேஷன் வசதிகளை தவிர, கார் எந்த எரிபொருளில் தற்போது இயங்குகிறது என்பது குறித்த தகவல்களையும் பெற முடியும்.

அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் மான்ஸா ஹைபிரிட் கார் வர்த்தக ரீதியில் அறிமுகமாகும்போது மார்க்கெட்டில் நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது.

Most Read Articles
English summary
The Tata Indigo Manza Hybrid Concept is a fusion of technology and luxury whilst having an extremely small carbon footprint thanks to its efficient hybrid architecture. Powered by a Hybrid 1.05Litre DiCOR engine and potent electric motors, the Indigo Manza Hybrid is an efficient yet powerful sedan with a focus on drivability and very usable performance in the real world, due to its nature of being both a Series and a Parallel Hybrid.
Story first published: Wednesday, January 11, 2012, 14:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X