அடுத்த மாதம் வங்கதேசத்தில் தடம் பதிக்கும் டாடா நானோ

Tata Nano
இலங்கை, நேபாளத்தை தொடர்ந்து அடுத்த மாதம் வங்கதேசத்தில் தடம் பதிக்கிறது டாடா நானோ கார்.

இந்தியாவில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாவிட்டாலும், கடந்த ஆண்டு இலங்கை மற்றும் நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நானோ கார் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து, தற்போது வங்கதேசத்தில் நானோ காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதற்காக, நிதோல் குழுமத்தை அங்கீகாரம் பெற்ற விற்பனையாளராக டாடா மோட்டார்ஸ் நியமித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த மாதம் வங்கதேசத்தில் நானோ காரின் விற்பனையை துவங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிதோல் குழுமம் கூறியிருப்பதாவது," அடுத்த மாதம் முதல் லாட்டில் 200 நானோ கார்கள் வர இருக்கின்றன.

ஆண்டுக்கு 2,000 நானோ கார்களை விற்க டாடா மோட்டார்ஸ் இலக்கு வைத்துள்ளது. மேலும், வாடிக்கையாளர் அளிக்கும் வரவேற்பை பொறுத்து வங்கதேசத்தில் அசெம்பிளிங் ஆலை தொடங்கும் திட்டமும் டாடா மோட்டார்ஸ் வசம் உள்ளது.

இதன்மூலம் இறக்குமதி வரி வெகுவாக குறையும் என்பதால் குறைந்த விலையில் நானோ காரை விற்பனை செய்ய முடியும்," என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, வங்கதேசத்தில் ரூ.4.08 லட்சம் விலையில் நானோ காரை விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தை தொடர்ந்து தாய்லாந்து, மியான்மர் மற்றும் இந்தோனேஷிய நாட்டு சந்தைகளில் நானோ காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata motors to commercially launch the small wonder Nano car in Bangladesh by next month. The Nithol group has been appointed official importer of Nano car. The nano car will be sold Rs.4.08 lakhs starting price in Bangladesh, says reports.
Story first published: Monday, January 16, 2012, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X