டிசம்பரிலும் டாடா நானோ கார் விற்பனை படுஜோர்

Tata Nano
கடந்த மாதம் நானோ காரின் விற்பனை அமோக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மாதம் 7,466 நானோ கார்கள் விற்பனையாகியதால் டாடா மோட்டார்ஸ்க்கு புதுத்தெம்பு கிட்டியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு மத்தியில் நானோ காரின் விற்பனை அதளபாதாளத்திற்கு சென்றது. மீண்டும் எழ முடியாத அளவிற்கு நானோ காரின் விற்பனை தொடர்ந்து சரிந்ததால் டாடாவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, சலுகைகள் மற்றும் எளிய கடன் திட்டங்களால் நானோ காரின் விற்பனை மீண்டும் எழுச்சி பெற துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 6,401 நானோ கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 7,466 நானோ கார்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடுகையில் கடந்த மாதம் நானோவின் விற்பனை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, கடந்த டிசம்பரில் ஜாகுவார் லேண்ட் ரோவர் உட்பட டாடா குழுமத்தின் சர்வதேச வாகன விற்பனை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோன்று, கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,14,920 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன விற்பனை(டாடா, டாடா ஹிஸ்பானோ மற்றும் ஹிஸ்பானோ கரோசிரா உட்பட)53,854 வாகனங்களாக இருந்தது.

சர்வதேச அளவில் டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன விற்பனை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனம் சர்வதேச அளவில் 61,066 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. இதில், உள்நாட்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் 30,085 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

Most Read Articles
English summary
Sales of the Tata Nano were 7,466 nos., higher by 29%, compared to 5,784 nos., sold in December, last year. The Indica range sales were 9,307 nos., higher by 57%, over 5,923 nos., sold in December, last year. The Indigo range recorded sales of 6,888 nos., higher by 32%, over 5,233 nos., sold in December, last year. The Sumo/ Safari/ Aria/ Venture range accounted for sales of 5,255 nos., a growth of 90%, over 2,759 nos., sold in December, last year.
Story first published: Tuesday, January 17, 2012, 16:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X