காத்திருப்பு காலத்தை குறைக்க டொயோட்டா நடவடிக்கை!

Liva
மார்க்கெட் பங்களிப்பை கூட்டுவதற்கும், காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கும், தனது உற்பத்தியை கணிசமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை டொயோட்டா மேற்கொண்டுள்ளது. இதற்காக 900 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொயோட்டாவின் லிவா, எட்டியோஸ் கார்களின் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இதேபோன்று, இன்னோவாவுக்கும் நல்ல தேவை இருக்கிறது. மேலும், இந்தியாவிலிருந்து கார்களை ஏற்றுமதியும் துவங்கியிருப்பதால் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள டொயோட்டா முடிவு செய்துள்ளது.

எதிர்கால தேவையை கருதி இந்தியாவில் தனது வர்த்தக விரிவாக்கப் பணிகளை தீவிரமாக்கியிருக்கிறது டொயோட்டா. பெங்களூரில் உள்ள தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக புதிதாக 900 கோடியை முதலீடு செய்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தனது ஆலையை விரிவாக்கம் செய்கிறது டொயோட்டா. இதன்மூலம், டொயோட்டா கார்களின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Toyota Kirloskar Motor (TKM) is spearheading to capture higher market stake with the plans to ramp up the production capacity by 1 lakh cars to be initiated from March in the year 2013.
Story first published: Saturday, August 25, 2012, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X