இந்தியாவில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்யும் வோக்ஸ்வேகன்!

Volkswagen Vento
அடுத்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.2,000 கோடியை முதலீடு செய்யப்போவதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், சகன் மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் அதிக முதலீட்டில் இரண்டு கார் ஆலைகளை ஏற்கனவே அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.

இந்தநிலையில், இந்திய கார் மார்க்கெட்டின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், சந்தை போட்டியை சமாளிக்கும் வகையிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய தி்ட்டமிட்டுள்ளது.

இதற்காக, அடுத்த ஆண்டு இந்தியாவில் கூடுதலாக ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டு்ள்ளது. ஆலை விரிவாக்கம், புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவது மற்றும் தனது இந்திய ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பிரிவுகளுக்கு இந்த நிதியை பயன்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

மேலும், தனது துணை பிராண்டுகளாகன ஆடி மற்றும் ஸ்கோடா நிறுவனங்களின் விரிவாக்க்ப் பணிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Germany car maker Volkswagen planning to invest Rs.2,000 crore in India by Next year. The comapny said, thw huge investment will utilised for New model launches, production expansion and R&D activities.
Story first published: Friday, January 6, 2012, 13:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X