நானோ கார் விற்பனை: டாடாவின் "மாத்தியோசி" திட்டம்

Tata Nano
கடந்த இரண்டு ஆண்டுகளின் சில காலாண்டுகளில் நானோ காரின் விற்பனை அந்த காரை பிளாப் மாடல் என்று கூறும் அளவுக்கு கொண்டு போனது. அதிக தேவை ஏற்பட்டு, அதனால் உற்பத்தியை அதிகரிக்கும் அளவுக்கு நெருக்கடியை இதுவரை நானோ டாடா மோட்டார்சுக்கு கொடுக்கவில்லை.

இருப்பினும், ரூ.2 லட்சத்திற்குள் மார்க்கெட்டில் இருக்கும் ஒரே கார் என்ற பெருமையை நானோ தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. எந்தவொரு நிறுவனமும் இதுவரை நானோ காரின் விலையில் புதிய கார் மாடலை அறிமுகப்படுத்த முன் வரவில்லை.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நானோ காரின் விற்பனை மீண்டும் விறு விறுவென எகிறி வருகிறது. இதற்கு, டாடா மோட்டார்சின் புதிய மார்க்கெட்டிங் யுக்திகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

குறைந்த முன்பணம், சுலப மாதத்தவணைகள் ஆகியவை நடுத்தர வாசிகளின் மனதில் நானோவுக்கு மீண்டும் இடம் பிடித்துக்கொடுத்துள்ளது. தவிர, கூடுதல் அம்சங்களுடன் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 2012 மாடல் நானோ காரும் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது.

மேலும், பைக்கிலிருந்து காருக்கு மாற நினைப்பவர்களுக்கும், பெண் வாடிக்கையாளர்களும் நானோ காரை சிறந்த தேர்வாக கருதுகின்றனர். மேலும், அதிகரித்து வரும் கார் கடன் வட்டி மாதத்தவணையில் அவ்வப்போது கூடுதல் சுமையை ஏற்படுத்துவதும், குறைந்த விலையில் கிடைக்கும் நானோ காரை வாங்குவதை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக கருதுவதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பங்கேற்ற டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா, நானோ கார் பிளாப் மாடல் இல்லை என்று கூறினார். இந்த கார் அவரது கனவு திட்டமும் கூட. இந்த நிலையில், நானோ கார் பிளாப் மாடல் இல்லை, ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையில் சில தவறுகள் செய்ததுதான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

ரத்தன் டாடா கூறிய கருத்துக்களை தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாடா மோட்டார்ஸ் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன்," நானோ காரின் விற்பனையை அதிகரிக்க புதிய மார்க்கெட்டிங் யுக்திகளை செயல்படுத்தி வருகிறோம்.

முதலில் இது ஏழைகளின் கார் என்ற முத்திரையை மாற்ற முயற்சி எடுத்து வருகிறோம். புதிய மார்க்கெட்டிங் யுக்திகளால் தற்போது நானோ காரின் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.
தவிர, நானோ காருக்காக நாடு முழுவதும் 250 பிரத்யேக ஷோரூம்களை அமைக்க உள்ளோம். இதுதவிர, நாடு முழுவதும் 750 அவுட்லெட்டுகள் மூலம் நானோவை விற்பனையை செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

Most Read Articles
English summary
Tata Motors has put in place a new marketing strategy to push the sales of the Nano. R Ramakrishna, the company's vice-president while speaking about the new strategy the company was working on removing the poor man's car tag from the Nano. He also said the Nano would be made more accessible to people across the country by opening more exclusive Tata Nano showrooms.
Story first published: Monday, January 30, 2012, 14:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X