டூ வீலர் ஓட்டும் பெண்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்: டெல்லி ஐகோர்ட்

Helmet Mandatory For Woman
டூ வீலர் ஓட்டும் பெண்கள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயமாக்குமாறு டெல்லி அரைச ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1993ன்படி, இருசக்கர வாகனம் ஓட்டும் சீக்கியர்கள் மற்றும் பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் டர்பன் எனும் தலைப்பாகை அணிவதாலும், பெண்களுக்கு முடி அதிகம் இருப்பதால் ஹெல்மெட் அணிவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில்க்கொண்டும், ஹெல்மெட் கட்டாயம் இல்லை என்று மோட்டார் வாகன சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டூ வீலர் ஓட்டும் பெண்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குமாறு டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், டெல்லியில் ஹெல்மெட் அணியாமல் டூ வீலரில் சென்று விபத்தில் சிக்கிய 80க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள டெல்லி ஐகோர்ட் பெண்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குமாறு அம்மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும, இதற்காக கடுமையான சட்டங்களை அமல்படுத்துமாறும் கூறியுள்ளது.

மேலும், மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குமாறும் டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. இதனால், இனி டெல்லியில் டூ வீலர் ஓட்டும் பெண்களுக்கும், பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது.

Most Read Articles
English summary
The days are not too far when we will see women two wheeler drivers wearing helmets in Delhi. While men were forced to wear helmets, there was no such rule that forced women to do that. The Delhi High Court has now entered the scene and has asked the Delhi Government to enforce strict rules that will make it
Story first published: Thursday, April 26, 2012, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X