இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய பிஎம்டபிள்யூ ஐ8 கார்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த காருக்கு கோடீஸ்வரர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இலகு எடை

இலகு எடை

கார்பன் ஃபைபர் பாடி மற்றும் ஏராளமான பிரத்யேக உலோக பாகங்களுடன் லைட் வெயிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் 1,490 கிலோ எடை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் தொழில்நுட்பம்

ஹைபிரிட் தொழில்நுட்பம்

ஹைபிரிட் நுட்பம் கொண்ட இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவரை பின்புற வீல்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் முன்புற சக்கரங்களுக்கும் பவரை கடத்தும். பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிகபட்சமாக ஹைபிரிட் நுட்பத்தில் 357 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கணக்கீட்டின்படி, ஒரு லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் இந்த கார் கடந்துவிடும். பிஎம்டபிள்யூ ஐ8 அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் கடந்து விடும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

பெட்ரோல் மற்றும் பேட்டரி சார்ஜ் மூலம் 500 கிமீ வரை இந்த ஸ்போர்ட்ஸ் கார் செல்லும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், முன்புறம், பின்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், நேவிகேஷன் சிஸ்டம், ஆட்டோமேட்டட் பிரேக் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட் போன்ற பல நவீன வசதிகளை கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

டியூவல் ஏர்பேக்ஸ், கர்டெயின் ஏர்பேக்ஸ், அவசர காலங்களில் பேட்டரியின் மின் இணைப்பு தானியங்கி முறையில் துண்டிக்கும் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைவில்லாத காராக வந்திருக்கிறது.

விலை

விலை

ரூ.2.29 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

 
Most Read Articles

English summary
The BMW i8 has been launched in India. This plug in hybrid sports car from the German manufacturer has been a very anticipated launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X