புத்தம் புதிய டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி கார் விற்பனைக்கு வந்தது - விலை விபரம்!

ஆன்ரோடு விலையை பெறுவதற்கு மொபைல் எண், இமெயில் எதுவும் தேவையில்லை. கார்களின் ஆன்ரோடு விலையை நொடியில் "தமிழில்" தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய டட்சன் கோ ப்ளஸ் காரின் ஆன்ரோடு விலை ஒரு சாம்பிளுக்காக... 

டட்சன் கோ ப்ளஸ் காரின் ஆன்ரோடு விலை விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வசதிகளுக்கு தகுந்தவாறு 4 வேரியண்ட்டுகளில் இந்த புதிய மினி எம்பிவி கார் விற்பனைக்கு கிடைக்கும். 5 பெரியவர்கள், 2 சிறியவர்கள் செல்வதற்கு ஏற்ற மாடலாக வெளிவந்திருக்கும் இந்த புதிய கார் சிறிய கார்களுக்கு போட்டியை கொடுக்கும் விதத்தில் மிக மிக சவாலான விலையில் வந்துள்ளது.

Datsun Go Plus
 

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 20.62 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. டாப் வேரியண்டில் கூட ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கிடையாது. ஆனால், டி டாப் வேரியண்ட்டில் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் ஆப்ஷனலாக பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த மாதம் டட்சன் கோ ப்ளஸ் காரை ஓட்டிப் பார்த்து எழுதிய எமது விரிவான விமர்சனக் கட்டுரையில் கணித்து கூறியது போலவே, இதன் உயர் வகை மாடல் ரூ.5 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய காருக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

வேரியண்ட் வாரியாக விலை விபரத்தை கீழே காணலாம்.

டி: ரூ. 3.79 lakh

டி1: Rs 3.81 lakh

ஏ: Rs 4.15 lakh

டி: Rs 4.61 lakh

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

டட்சன் கோ ப்ளஸ் காரின் சாதக, பாதகங்கள் குறித்து நாம் எழுதிய விரிவான விமர்சனக் கட்டுரையை படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்.

Most Read Articles

English summary
Nissan has launched Datsun Go plus mini MPV car in India at INR. 3.79 lakh, Exshowroom, Delhi. The new Datsun Go Plus mpv car is available in four variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X