சிக்கென்ற தோற்றத்துடன் புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஃபியட்

சிக்கென்ற தோற்றம் கொண்ட புத்தம் புதிய எம்பிவி காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஃபியட். ஃபியட் 500எல் லிவிங் என்ற பெயர் கொண்ட இந்த புதிய எம்பிவி கார் ஃபியட் 500 காரின் நீட்டிக்கப்பட்ட எம்பிவி காராக வர இருக்கிறது.

அடுத்த மாதம் முதல் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் இந்த புதிய எம்பிவி காருக்கான முன்பதிவு துவங்குகிறது. இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், டொயோட்டா இன்னோவாவாவுக்கு நேர் எதிரியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கவர்ச்சிக் கன்னி

கவர்ச்சிக் கன்னி

ஃபியட் 500 காரை 8 இஞ்ச் நீடித்து எம்பிவி காராக மாற்றி இருக்கிறது ஃபியட். பார்க்க படு கவர்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் இன்னோவாவை மறந்து இந்தியர்களின் புதிய கவர்ச்சிக் கன்னியாக மாறிவிடும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

மூன்று வரிசை இருக்கை வசதி கொண்ட இந்த காரில் 7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

பாப் ஸ்டார் மற்றும் லாஞ்ச் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

சூப்பர்மா...

சூப்பர்மா...

இந்த கார் 19 பாடி கலர்களில் கிடைக்கும். இதில், 11 இரட்டை வண்ணக் கலவை கொண்ட மாடல்களும் அடக்கம். இதுதவிர, 6 இன்டிரியர் மற்றும் 15 வகையான அலாய் வீல் காம்பினேஷனில் வருகிறது. மொத்தமாக 282 வெரைட்டிகளில் இந்த கார் கிடைக்கும்.

பூட் ரூம்

பூட் ரூம்

மூன்றாவது இருக்கை மடக்கி விரிக்கும் வசதி கொண்டது. மூன்றாவது வரிசையை மடக்கினால் இதன் பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை 637 லிட்டர்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

95 எச்பி மற்றும் 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் மாடல்கள் மற்றும் 85 எச்பி மற்றும் 105 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இரண்டுவிதமான மல்டிஜெட் டீசல் எஞ்சின்களுடன் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வருகிறது.

இன்னோவாவுக்கு போட்டி

இன்னோவாவுக்கு போட்டி

இன்னோவாவை பார்த்து சலித்து, புளித்துப் போன கண்களுக்கு இந்த புதிய ஃபியட் எம்பிவி கார் நிச்சயம் முதல் பார்வையிலேயே காதலில் விழ வைத்துவிடும்.

Most Read Articles
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
English summary
Fiat has revealed a new seven seater MPV based on its 500 hatchback. While the 500L is an extended version of the 500, with a seating capacity for 5 adults, the 500L Living, as the new model is called, gains about 8 inches to provide 5 + 2 seating configuration.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X