ஃபியட் புன்ட்டோ, லீனியாவுக்கு இலவச ஆக்சஸெரீஸ் பேக்: சூப்பர் ஆஃபர்

By Saravana

தீபாவளி, தசரா பண்டிகைககளின்போது கார்களுக்கான சிறப்பு சலுகைகளை தவறவிட்டவர்கள், அதே சலுகைகளுடன் கார்களை வாங்கும் வாய்ப்பை ஃபியட் அறிவித்துள்ளது. கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை ஃபியட் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

'அப்சொலியூட் எடிசன்' என்ற பெயரிலான இந்த புதிய கார்களுக்கு சிறப்பு ஆக்சஸெரீஸ்களை இலவசமாக ஃபியட் வழங்குகிறது. இதுதவிர, அதிகபட்சம் ரூ.70,000 வரையிலான சிறப்பு தள்ளுபடி சலுகைகளையும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 மதிப்பு

மதிப்பு

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜில் வந்துள்ள லீனியா, புன்ட்டோ கார்களுக்கு ரூ.25,000 மதிப்புடைய ஆக்சஸெரீஸ்களை இலவசமாக வழங்குவதாக ஃபியட் தெரிவித்துள்ளது. இதில், டச் ஸ்கிரீன் கொண்ட ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், 3ஜி ஆன்ட்ராய்டு டேப்லெட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் அப்சொலியூட் எடிசன் என்ற வெளிப்புறத்திற்கான பேட்ஜ்கள் ஆகியவை அடங்கும்.

 இதர ஆக்சஸெரீஸ்

இதர ஆக்சஸெரீஸ்

ஸ்ப்ளாஷ் கார்டுகள், லீனியா மற்றும் புன்ட்டோ பிராண்டு பொறித்த டோர் சில் கார்டுகள் ஆகியவற்றுடன் லீனியாவின் பின்புறத்திற்கான குரோம் தகடு மற்றும் புன்ட்டோவுக்கு உயர்தர தரை விரிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவை மட்டுமா?

இவை மட்டுமா?

சிறப்பு ஆக்சஸெரீஸ் தவிர்த்து லீனியா காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சாலை அவசர உதவி திட்டம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழியாக ரூ.70,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

புன்ட்டோவுக்கு...

புன்ட்டோவுக்கு...

புன்ட்டோவுக்கு ரூ.60,000 மதிப்புக்கு சாலை அவசர உதவி திட்டம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வாடிக்கையாளர்கள்

பழைய வாடிக்கையாளர்கள்

ஏற்கனவே லீனியா, புன்ட்டோ கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு ஆக்சஸெரீஸ்களை ரூ.25,000 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை உள்ளடக்கிய புன்ட்டோ மற்றும் லீனியா கார்கள் அதே விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என ஃபியட் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
If you missed out on purchasing a vehicle during Dasara or Diwali you get another chance, from Fiat India. The automaker has announced Linea Absolute Edition and Punto Absolute Edition, both of which come with Festive Accessory pack at no additional cost and other benefits.
Story first published: Monday, November 25, 2013, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X