ஈக்கோஸ்போர்ட் பேஸ் வேரியண்ட்டில் ஒண்ணுமே இல்லையாம்!

ஈக்கோஸ்போர்ட்டை பெரும் ஆவலுடன் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது கொஞ்சம் கசப்பான செய்தியாகவே இருக்கும். ஈக்கோஸ்போர்ட்டின் பேஸ் வேரியண்ட்டில் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஈக்கோஸ்போர்ட்டின் விபர குறிப்பேட்டு தகவல்கள் கசிந்துள்ளன. அதில், ஆம்பியன்ட் என்ற பேஸ் வேரியண்ட்டில் ஏபிஎஸ், காற்றுப் பைகள், பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை.

பேஸ் வேரியண்ட்டாவது பரவாயில்லை என்று டிரென்ட் என்ற மிட்வேரியண்ட்டிற்கு சென்றால் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இருந்தாலும் ஏர்பேக்குகள் இல்லை, பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்பு வசதிகளும் இல்லை. டாப் வேரியண்ட்டில் மட்டுமே பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. பேஸ் வேரியண்ட்டை ரூ.6 லட்சத்துக்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தி மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக ஃபோர்டு இவ்வாறு வசதிகளை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஈக்கோஸ்போர்ட்டின் டாப் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் எஞ்சின்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் கிடையாது. வெறும் 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வசதிகள் குறைந்த ஈக்கோஸ்போர்ட் டீசல் மாடலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விபர குறிப்பேடு

ஈக்கோஸ்போர்டிடன் வேரியண்ட் வாரியான பாதுகாப்பு அம்சங்களை காணலாம்.

Most Read Articles
English summary
Ford EcoSport Ambiente, the least expensive variant is expected to be offered between INR 5 and 6 lakhs. This variant will be missing the following safety features: ABS, driver assists features such as EBA, ESC, TCS and HLA, driver airbag, passenger airbag.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X