புதிய ஃபோர்டு காம்பேக்ட் செடான் காரின் பெயர் ஆஸ்பயர்... எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

By Saravana

காம்பேக்ட் செடான் கார்களுக்கான மார்க்கெட் படுவேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால், மணம் இருந்தால் சுவையில்லை, சுவையிருந்தால் திடமில்லை என்பது போன்று ஓர் மனம் ஒப்பி வாங்குவதற்கான ஓர் சிறந்த மாடல் இல்லை. டிசைன் சரியிருந்தால், மைலேஜ் இல்லை. மைலேஜ் நன்றாக இருந்தால் டிசைன் சரியில்லை, எல்லாம் சரியாக இருந்தால் சர்வீஸ் சரியில்லை என்று வாடிக்கையாளர்கள் மனது ஓர் அருமையான காருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இருக்கும் 4 மாடல்களிலும் ஒவ்வொரு குறையை வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், ஓர் சிறந்த மாடலுக்கான ஏக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த ஏக்கத்தை போக்குவதற்காக பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில், அடுத்ததாக காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் இறங்கப் போகும் நிறுவனம் ஃபோர்டு. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபோர்டு காம்பேக்ட் எஸ்யூவி இந்த ஆண்டு விற்பனைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த புதிய கார் பற்றிய சில கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

பெயர்

பெயர்

புதிய ஃபோர்டு காம்பேக்ட் செடான் கார் ஃபிகோ ஆஸ்பயர் என்ற பெயரில் அறிமுகமாக உள்ளதாக அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்படியா

அப்படியா

இந்தியாவில் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ காருடன் சேர்த்து 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் செடான் காரும், 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஒரு செடான் காரும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை இரண்டுமே புதிய தலைமுறை ஃபிகோ காரின் அடிப்படையிலான செடான் கார் மாடல்களே.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 71 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சினுடனும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

புதிய தலைமுறை ஃபிகோ கார் ரூ.4.6 லட்சம் முதல் ரூ.7.25 லட்சம் வரையிலான விலையிலும், புதிய ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் காரை ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவை, மணம்

சுவை, மணம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு பிறகு இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் மீது ஃபோர்டு நிறுவனம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்திலான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின்கள், வசதிகளுடன் இந்த காரை அறிமுகம் செய்யப்படும் என்று ஆட்டோமொபைல் துறையினரும், வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

 
Most Read Articles

English summary
According to reports, Ford new compact sedan is likely to be named Ford Figo Aspire in India while the hatchback is likely to get the same name of its predecessor.
Story first published: Monday, March 2, 2015, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X