ஹோண்டா அமேஸ் காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகம்!

Written By:

இயற்கை எரிவாயுவில் இயங்கும் ஹோண்டா அமேஸ் கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும், 1.2 லிட்டர் ஐ- விடெக் பெட்ரோல் எஞ்சினை சிஎன்ஜியிலும் இயங்கும் விதத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

 

ஹோண்டா அமேஸ் காரில் எஸ் ப்ளஸ் என்ற புதிய மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலில் இந்த சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட மாடல் கிடைக்கும்.

சிஎன்ஜி கிட் மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் ரூ.54,315 உள்பட ரூ.5,99,585 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மாடல் கிடைக்கும்.

மேலும், சிஎன்ஜி கிடைக்கும் நகரங்களில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப்புகளில் இந்த புதிய மாடல் கிடைக்கும்.

இந்த புதிய சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட மாடலுக்கு 2 ஆண்டுகள் தயாரிப்பாளர் வாரண்டியை ஹோண்டா கார் நிறுவனம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Honda Cars India Ltd. (HCIL), today launched its CNG-ready variant of the family-sedan Honda Amaze. The new variant Amaze 1.2 S MT Plus (i-VTEC) is modified petrol Honda Amaze which is compatible for CNG fuel option.
Story first published: Friday, February 13, 2015, 7:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark