இந்தியாவில் ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியை களமிறக்க திட்டம்

Written By:

சமீபத்தில் பிஆர்வி எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்த ஹோண்டா நிறுவனம் அடுத்து எச்ஆர்வி எஸ்யூவியையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டம் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் விரைவில் வரும் ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி மாடல்களுக்கு விலை அடிப்படையில் இது போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிகாரி சூசகம்

அதிகாரி சூசகம்

ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யசிரோ யுனோ சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியா கொண்டு வருவது குறித்த முடிவு செய்யவில்லை. ஆனால், வர்த்தக வாய்ப்பு இருந்தால், நிச்சயம் இந்த எஸ்யூவியை கொண்டு வர பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 திட்டம்

திட்டம்

அதேநேரத்தில், அடுத்த ஆண்டு ஹோண்டா எச்ஆர்வி இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டம் ஹோண்டா நிறுவனத்திடம் உள்ளதாக அந்நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

 எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியில் 175 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 118 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.6 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சினும் கொண்டதாக வெளிநாடுகளில் விற்பனையாகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

டியூவல் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மல்டி ஆங்கிள் ரியர் வியூ கேமரா என்று ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்தியாவில் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

 
English summary
Honda Plans To Launch HRV SUV in Indian Market.
Story first published: Saturday, June 18, 2016, 17:25 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos