இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்

By Saravana

ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் புதிய டீசல் வேரியண்ட் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஜாகுவார் எக்ஸ்எஃப் எக்ஸிகியூட்டிவ் செடான் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய மாடலில் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Jaguar XF Diesel
 

இந்த காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 எச்பி பவரையும், 450என்எம் டார்க்கையும் அளிக்கும். இத்துடன் புதிய 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றும்.

புதிய எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்எஃப் கார் மாடலில் புதிய நேவிகேஷன் சிஸ்டம், ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல், கலர் டச்ஸ்கிரீன், ஜாகுவார் ஸ்மார்ட் கீ சிஸ்டம், கீ லெஸ் ஸ்டார்ட், இன்டிரியர் மூட் லைட்டிங், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் இருக்கைகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏர்பேக்குகள், பாதசாரிகளை கண்டுணரும் சென்சார், விபத்துக்களின்போது ஓட்டுனரை பாதுகாக்கும் விப்ளாஷ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட முன் இருக்கைகள் போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

ரூ.45.12 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 19 நகரங்களில் உள்ள 21 ஜாகுவார் ஷோரூம்களில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Most Read Articles

English summary
British luxury car manufacturer Jaguar, has launched the Jaguar XF 2.2L Diesel called the Executive Edition today. The Jaguar XF 2.2L Diesel is priced at INR 45.12 lakhs (ex-showroom Mumbai)
Story first published: Monday, December 8, 2014, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X