ரூ.5.07 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மாருதி டிசையர்!

By Saravana

டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் கொண்ட மாருதி டிசையர் கார் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பெட்ரோல் மாடலில் 4 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடலில் 3 வேரியண்ட்டுகளிலும் புதிய மாருதி டிசையர் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்விஃப்ட்ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும், பெட்ரோல் மாடலில் LXi வேரியண்ட்டில் சில கூடுதல் வசதிகள் கொண்ட LXi(O)ஆப்ஷனல் வேரியண்ட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Maruti Dzire Facelift
 

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. ஏற்கனவே இருந்த டிசையர் 87 பிஎஸ் பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வந்தது. ஆனால், புதிய டிசையரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 84.3 பிஎஸ் பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, முந்தைய மாடலைவிட கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தவிர்த்து, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎஸ் பவரை அளிக்கும். மேலும், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை டீசல் மாடல் பெற்றிருக்கிறது. இதுவரை அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை தக்க வைத்து வரும் சியாஸ் காரின் மைலேஜ் அளவைவிட கூடுதலாக மைலேஜ் தரும் விதத்தில் வந்திருக்கிறது புதிய டிசையர்.

விலை விபரம்

பெட்ரோல் வேரியண்ட்டுகள்

டிசையர் LXi - ரூ.5.07 லட்சம்

டிசையர் Lxi(O) - ரூ.5.20 லட்சம்

டிசையர் VXi - ரூ.5.85 லட்சம்

டிசையர் ZXi - ரூ.6.80 லட்சம்

டீசல் வேரியண்ட்டுகள்

டிசையர் LDi - ரூ.5.99 லட்சம்

டிசையர் VDi - ரூ.6.85 லட்சம்

டிசையர் ZDi - ரூ.7.81 லட்சம்

[அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்]

மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முழு சிறப்பம்சங்களை மற்றொரு செய்தியில் காணலாம்.

Most Read Articles

English summary
Maruti Suzuki India has launched refreshed version of its popular compact sedan Swift Dzire with introductory prices ranging from Rs 5.07 lakh to Rs 7.81 lakh (ex-showroom Delhi). 
Story first published: Tuesday, February 24, 2015, 9:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X