இந்தியாவில் லிமிடேட் எடிசன் பென்ஸ் சி கிளாஸ் அறிமுகம் - விபரம்

By Saravana

உலக அளவில் 10 மில்லியன் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த புதிய விற்பனை சாதனையை கொண்டாடும் விதமாக இந்தியாவில் லிமிடேட் எடிசன் சி கிளாஸ் காரை மெர்சிடிஸ் பென்ஸ் இன்று விற்பனைக்கு கொண்டு வந்தது.

மும்பையில் நடந்த விழாவில் 'எடிசன் சி' என்ற பெயரிலான இந்த புதிய கார் பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 500 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள இந்த எடிசன் சி லிமிடேட் எடிசன் காரில் இருக்கும் கூடுதல் அம்சங்கள் மற்றும் இதர விபரங்களை காணலாம்.

ஏஎம்ஜி பாடி கிட்

ஏஎம்ஜி பாடி கிட்

சி கிளாஸ் காரின் சி220 சிடிஐ வேரியண்ட் அடிப்படையில் இந்த கார் வந்துள்ளது. எடிசன் சி லிமிடேட் எடிசன் சி கிளாஸ் கார் ஏஎம்ஜி பாடி கிட் பொருத்தப்பட்டுள்ளது முக்கிய அம்சம்.

புதிய அலாய் வீல்

புதிய அலாய் வீல்

வெளிப்புறத்தில் மற்றுமொரு மாற்றம் புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பது. இதில், இரட்டை வண்ணக் கலவையுடன் 5 ஸ்போக் 17 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. புகைப்போக்கி குழாய்களின் முனையில் குரோம் பூச்சு செய்யப்பட்டுள்ளது.

 இன்டிரியர்

இன்டிரியர்

மைக்ரோ ஃபைபர் அப்ஹோல்ஸ்டரி, ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் இன்டிரியரை அலங்கரிக்கின்றன. 11.4 செமீ வண்ணத் திரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மூலம், மல்டி மீடியா மற்றும் நேவிகேஷன் பெறலாம். இதுதவிர, இன்டியரின் பல இடங்களில் சிறிய விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

6 உயிர்காக்கும் காற்றுப்பைகள், இபிடி., தொழில்நுட்பத்துடன் இணைந்து செயலாற்றும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், அட்டென்ஷன் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 170 பிஎச்பி ஆற்றலையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7ஜி ட்ரோனிக் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரிகிறது.

விலை

விலை

ரூ.39.16 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய சி கிளாஸ் லிமிடேட் எடிசன் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Mercedes Benz C-Class Celebration Edition, launched at an event in Mumbai today, is available for a price of INR 39.16 lakhs (Ex-showroom, Mumbai). production of the ‘Edition C' will be limited to only 500 units for the Indian market. More information about the sedan in the gallery above.
Story first published: Tuesday, November 12, 2013, 15:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X