இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய பென்ஸ் சி கிளாஸ்!

By Saravana

வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய பென்ஸ் சி கிளாஸ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் பெங்களூரில் நடந்த கம்ப்யூட்டர் கண்காட்சியில் தரிசனம் தந்த இந்த புதிய சி கிளாஸ் மாடலின் விலை உள்ளிட்ட விபரங்கள் இன்று வெளியிடப்பட்டன. பெட்ரோல் மாடலில் மட்டுமே தற்போது விற்பனைக்கு கிடைக்கும் என்பதுடன், இது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

2015 Mercedes Benz C Class
 

அடுத்த ஆண்டு டீசல் மாடல் வருவதோடு, இந்தியாவில் இந்த புதிய மாடலின் அசெம்பிள் துவங்கப்படும். 183 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு 7ஜி ட்ரோனிக் ப்ளஸ் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிப்ட் வசதியும் உண்டு.

ரூ.40.9 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பென்ஸ் சி கிளாஸ் கார் விற்பனைக்கு கிடைக்கும். பேபி எஸ் கிளாஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய சி கிளாஸ் கார் மாடல் தோற்றத்திலும் சிறப்பம்சங்களிலும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என கூறலாம்.

Most Read Articles

English summary
The Mercedes-Benz C-Class was launched today by the German carmaker, Mercedes. The C Class has been one of Mercedes' best selling product in India, for a long time now.The Mercedes-Benz C-Class is priced at INR 40.90 lakhs (ex-showroom Delhi).
Story first published: Tuesday, November 25, 2014, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X