மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்

By Saravana

இந்தியாவில் மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடலைவிட இந்த புதிய ஆட்டோமேட்டிக் மாடல் குறைவான விலையில் வந்திருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்ரும் ஹூண்டாய் சான்டா ஃபீ ஆகிய எஸ்யூவிகளின் ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது.

மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட்

மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடலில் 2.5லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 178 பிஎஸ் பவரையும், 350என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஸ்யூவியில் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது மட்டுமின்றி, பேடில் ஷிப்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

லிட்டருக்கு 12.8 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று தெரிவிக்கிறது. நேவிகேஷன் வசதியுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களை கொண்டது. பஜெரோ ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.23.55 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mitsubishi India has launched Pajero Sport Automatic at Rs 23.55 lakh (ex-showroom, Delhi). The new Pajero Sport AT is available in 4x2 variant and it is powered by the same 2.5-litre four-cylinder turbo diesel, that does duty on 4x4 variant Pajero Sport. 
Story first published: Saturday, November 15, 2014, 14:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X