பெங்களூரில் விற்பனைக்கு வந்தது புதிய ஆடி ஏ3 கேப்ரியோ கார்!

By Saravana

பெங்களூரில், ஆடி கார் நிறுவனத்தின் 2வது புதிய கார் ஷோரூம் இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆடியின் புதிய ஆடி ஏ3 கேப்ரியோ மாடலும் இன்று கர்நாடக மார்க்கெட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், நடிகையும், சாகச பயண பிரியருமான குல் பணாக், ஆடி இந்தியா மோட்டார்ஸ்போர்ட் சார்பில் ரேஸ் வீரர் ஆதித்யா பட்டேல், ஆடி இந்திய தலைவர் ஜோ கிங் ஆகியோர் பங்கேற்றனர்.

Audi A3 Cabriolet
  

ஆடி ஏ3 செடான் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலாக இந்த காருக்கு இந்தியாவில் தற்போது நேரடி போட்டியாளர்கள் இல்லை. எனவே, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

இந்த புதிய ஆடி ஏ3 கேப்ரியோ மாடலில் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். இதனுடன் 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் ட்வின் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றும்.

இந்த காரில் எலக்ட்ரோ - ஹைட்ராலிக் சிஸ்டத்தில் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட சாஃப்ட் டாப் கூரை உள்ளது. மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும்போதுகூட இந்த கூரையை மடக்கி திறக்கலாம்.

ரூ.45,83,000 பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு வந்திருக்கிறது.

Most Read Articles

English summary

 The Audi A3 Cabriolet has launched in Bangalore today. The new car is the first convertible in the category and one of the few open-top vehicles available in the country presently. Read on for more about pricing, specs, features and more.
Story first published: Friday, January 23, 2015, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X