இந்தியாவில் புதிய ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

ஆடி சொகுசு கார் நிறுவனத்தின் புதிய ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் லிமிடேட் எடிசன் எனப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பிரத்யேக அம்சங்கள் கொண்டதாக விற்பனை செய்யப்பட உள்ளது.

 

லேசர் ஹை பீம் ஹெட்லைட்டுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் முதல் கார் மாடல் ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண எல்இடி ஹெட்லைட்டுகளை விட இந்த லேசர் ஹெட்லைட் இருமடங்கு கூடுதல் தூரத்திற்கு ஒளியை பாய்ச்சும் திறன் கொண்டது.

மேலும், இரவில் கார் 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும்போது தானாகவே இந்த லேசர் ஹெட்லைட் ஒளிரும். அதிவேக ஆடி கார் மாடலான இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும் என்பதோடு, அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

உலக அளவிலேயே மொத்தம் 99 கார்கள் மட்டுமே இந்த மாடலில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2.97 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

ஒப்பீடு

ஆடி ஏ3
ஒப்பீடுக்கான ஆடி ஏ3வேரியண்ட் தேர்வு
-- மற்றொரு கார் தேர்வு --
English summary
German luxury car maker Audi has launched new 'Audi R8 LMX' in India priced at Rs 2.97 crore (ex-showroom Delhi).
Story first published: Thursday, January 15, 2015, 14:41 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos