புதிய பிஎம்டபிள்யூ எம்3 மற்றும் எம்4 கார்களை சச்சின் அறிமுகம் செய்தார்!

By Saravana

புதிய பிஎம்டபிள்யூ எம்5 செடான் காரைத் தொடர்ந்து, புதிய பிஎம்டபிள்யூ எம்3 மற்றும் எம்4 கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. டெல்லியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த புதிய மாடல்களை அறிமுகம் செய்தார்.

இந்த உயர்வகை பெர்ஃபார்மென்ஸ் செடான் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய அனுபவத்தை வழங்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. இந்த இரு கார்களிலும் இருக்கும் சில முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள்

பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள்

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் அடிப்படையில் எம்3 காரும், 4 சீரிஸ் காரின் அடிப்படையில் எம்4 கூபே காரும் பெர்ஃபார்மென்ஸ் மாடல்களாக வந்திருக்கின்றன.

இலகு பாகங்கள்

இலகு பாகங்கள்

முந்தைய மாடல்களைவிட உறுதியும், இலகு எடை கொண்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், இந்த புதிய மாடல்கள் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது. இந்த இரு மாடல்களும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

எஞ்சின்

எஞ்சின்

இரண்டு கார் மாடல்களிலும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 437 பிஎஸ் பவரையும், 550 என்எம் டார்க்கையும் வழங்கும். முன்னர் இருந்த வி8 எஞ்சினை விட இந்த புதிய எஞ்சின் 17 பிஎச்பி பவரை அதிகம் வழங்கும். இந்தியாவில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் இல்லை.

செயல்திறன்

செயல்திறன்

0-100 கிமீ வேகத்தை 4.1 வினாடிகளில் எட்டும் வல்லமை கொண்ட இந்த இரு மாடல்களும் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விலை

விலை

புதிய பிஎம்டபிள்யூ எம்3 செடான் கார் ரூ.1.12 கோடி விலையிலும், புதிய எம்4 கார் ரூ.1.21 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
German luxury car maker BMW has launched new M3 and M4 Cars in India.
Story first published: Thursday, November 27, 2014, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X