பிஎம்டபிள்யூ எம்5 பெர்ஃபார்மென்ஸ் செடான் விற்பனைக்கு வந்தது!

By Saravana

இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ எம்5 பெர்ஃபார்மென்ஸ் செடான் கார் விற்பனைக்கு வந்தது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் பெர்ஃபார்மென்ஸ் வகை மாடலாக இந்த கார் பெட்ரோல் மாடலில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் கார் இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சவால் தரும் என்பதில் ஐயமில்லை. இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


புதுப்பொலிவுடன் வந்த மாடல்

புதுப்பொலிவுடன் வந்த மாடல்

புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட வெளிப்புறத் தோற்றத்துடன் இன்னும் கவர்ச்சியாக டிசைனில் மாறியிருக்கிறது. இந்த புதிய பிஎம்டபிள்யூ எம்5 கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இரட்டை டர்போ - சார்ஜர்கள் கொண்ட 4.4 லிட்டர் 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. பேடில் ஷிப்ட் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 567 பிஎச்பி ஆற்றலை இதன் எஞ்சின் வெளிக்கொணரும் திறன் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்ட இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் நுட்பத்துடன் கூடிய ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இந்த காரில் உள்ளது.

 விலை

விலை

ரூ.1.35 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பிஎம்டபிள்யூ எம்5 கார் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
German luxury car manufacturer BMW on Monday launched the petrol-powered high-performance sedan M5 in India, priced at Rs 1.35 crore (ex-showroom).
Story first published: Tuesday, November 25, 2014, 10:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X