புதுப்பொலிவுடன் புதிய பென்ஸ் பி கிளாஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!

By Saravana

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ் கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பில் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த புதிய பி கிளாஸ் கார் மாடல் வந்திருக்கிறது.

இந்த புதிய மாடலுடன் கூடுதல் சக்தி கொண்ட ஏ கிளாஸ் காரின் டீசல் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும். இந்த புதிய மாடல்கள் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

புதிய முகப்பு க்ரில் அமைப்பு, புதிய டிசைனிலான முன்புற மற்றும் பின்புற பம்பர்களுடன் வந்திருக்கிறது புதிய பி கிளாஸ் கார். எல்இடி ஹெட்லைட்டுகளுடன் புதிய பி கிளாஸ் காரில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். மேலும், புதிய பம்பர்கள் டிசைன் மூலம் காரின் நீளம் 35மிமீ அதிகரித்திருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ் காரில் 135 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.1 லிட்டர் காமன் ரெயில் டைரக்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட டீசல் எஞ்சின் உள்ளது. பெட்ரோல் மாடலில் 122 எச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் உள்ளது.

வசதிகள்

வசதிகள்

எல்இடி ஹெட்லைட்டுகள்

பகல்நேர விளக்குகள்

10 ஸ்போக் 16 இன்ச் அலாய் வீல்கள்

ஈக்கோ ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்

ஹெட்லேம்ப் அசிஸ்ட்

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

அட்டென்ஷன் அசிஸ்ட்

அடாப்டிவ் பிரேக் சிஸ்டம்

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம்

ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்

ஹில் அசிஸ்ட்

ஸ்கிட் கன்ட்ரோல்

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

ஏர்பேக்ஸ்

விலை

விலை

மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ் காரின் 180 ஸ்போர்ட் பெட்ரோல் மாடல் ரூ.27.95 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும், 200சிடிஐ டீசல் மாடல் ரூ.28.95 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய ஏ கிளாஸ் மாடல்

புதிய ஏ கிளாஸ் மாடல்

புதிய பி கிளாஸ் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 2.1 லிட்டர் எஞ்சினுடன் கூடிய புதிய ஏ கிளாஸ் கார் மாடலையும் மெர்சிடிஸ் பென்ஸ் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் 135 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த கார் ரூ.25.95 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

 
Most Read Articles

English summary
Mercedes Benz has promised to launch 15 vehicles in 2015, they have today launched their refreshed B-Class. This new hatchback made its global debut at the 2014 Paris Motor Show. The German manufacturer has provided significant interior as well as exterior updates.
Story first published: Wednesday, March 11, 2015, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X