புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் டீசல் மாடல் விற்பனைக்கு வந்தது

Posted By:

புனேயில் நடந்த நிகழ்ச்சியில் புதிய மெர்சிடிஸ் பெனஸ் சி கிளாஸ் காரின் டீசல் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது டீசல் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 இரு வேரியண்ட்டுகள்

இரு வேரியண்ட்டுகள்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் டீசல் மாடல் சி220 சிடிஐ ஸ்டைல் மற்றும் சி220 சிடிஐ அவான்த்கார்டே என்ற இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய பென்ஸ் சி கிளாஸ் காரின் டீசல் மாடலில் 168 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்திருக்கிறது.

குறைவான எமிசன்

குறைவான எமிசன்

ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்ப வசதி இருப்பதால், அதிக மைலேஜையும், குறைவான புகை வெளியீடு தன்மையையும் வழங்கும் மாடலாகவும் பென்ஸ் தெரிவிக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 233 கிமீ டாப் ஸ்பீடு கொண்ட இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.4 வினாடிகளில் எட்டிவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 19.27 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த செக்மென்ட்டிலேயே அதிக மைலேஜ் தரும் டீசல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அசெம்பிள்

இந்தியாவில் அசெம்பிள்

துவக்கத்தில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். பின்னர், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் பெட்ரோல் மாடலைப் போன்றே, டீசல் மாடலும், முக்கிய பாகங்கள் தருவிக்கப்பட்டு, புனேயில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

 விலை

விலை

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் டீசல் காரின் ஸ்டைல் வேரியண்ட் ரூ.39.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், அவான்த்கார்டே என்ற வேரியண்ட் ரூ.42.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இவை முறையே ரூ.46 லட்சம் மற்றும் ரூ.49 லட்சம் ஆன்ரோடு விலையில் கொண்டதாக இருக்கும்.

 
English summary
German luxury car maker Mercedes Benz launched the C Class diesel in India at Rs. 39.90 Lakhs (Ex-showroom, Delhi). 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark