இந்தியாவில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் விற்பனைக்கு வந்தது!

Posted By:

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ செடான் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் காரின் சாதாரண வகை மாடலாக இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படங்கள், கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல் ஒரு வேரியண்ட்டிலும், டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 181 பிஎச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 135 பிஎச்பி பவரை வழங்கும் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மழை வந்தால் தானாக மூடிக்கொள்ளும் பானரோமிக் சன்ரூஃப், நேவிகேஷன் சிஸ்டம், ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, 6 ஏர்பேக்குகள் போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள்.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

பென்ஸ் சிஎல்ஏ CDI ஸ்டைல்: ரூ.31.5 லட்சம்

பென்ஸ் சிஎல்ஏ CDI ஸ்போர்ட்: ரூ.35.9 லட்சம்

பென்ஸ் சிஎல்ஏ பெட்ரோல் ஸ்போர்ட்: ரூ.35.0 லட்சம்

போட்டியாளர்

போட்டியாளர்

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடி ஏ3 செடான் கார் மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

 
English summary
German car maker Mercedes-Benz has finally launched the new CLA sedan in India at Rs 31.5 lakh (ex-showroom, Delhi). 
Please Wait while comments are loading...

Latest Photos