புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா விற்பனைக்கு வந்தது - விபரம்

By Saravana

மும்பையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பில் மாறுதல்கள், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக வந்திருக்கும் புதிய ஜெட்டா காரின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை.

முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே எஞ்சின்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் மாடலில் 121 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லி டர்போசார்ஜ்டு எஞ்சின் இருக்கிறது.

New Jetta
  

டீசல் மாடலில் 139 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

புதிய ஜெட்டா
 

புதிய ஜெட்டா காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, க்ரூஸ் கன்ட்ரோல், பை- ஸினான் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

மும்பை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

பெட்ரோல்

ட்ரென்ட்லைன்: ரூ.13.87 லட்சம்

கம்ஃபோர்ட்லைன்: ரூ.15.36 லட்சம்

டீசல்

ட்ரென்ட்லைன்: ரூ.15.01 லட்சம்

கம்ஃபோர்ட்லைன்: ரூ.16.89 லட்சம்

ஹைலைன் எம்டி: ரூ.18.76 லட்சம்

ஹைலைன் டிஎஸ்ஜி: ரூ.19.77 லட்சம்

Most Read Articles

English summary

 The new Volkswagen Jetta has been launched in India by the German carmaker. The Jetta retains the same engines as before but will have more features.
Story first published: Wednesday, February 18, 2015, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X