புதிய ரெனோ பல்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்

கூடுதல் வசதிகளுடன் புதிய ரெனோ பல்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

புதிய மாடலில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி கொண்ட டிரைவர் இருக்கை போன்ற வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

Reno Pulse
 

மேலும், ஏற்கனவே இருந்த பல்ஸ் காரில் ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, தற்போது ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டிலிருந்து பல்ஸ் கிடைக்கும். கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஏர்பேக் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பல்ஸ் காரில் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய மாடலின் எஞ்சின் மாற்றங்கள் இல்லை. ஏற்கனவே இருந்த 76 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 64 பிஎஸ் பவரை அதிகபட்சமாக அளிக்கும் திறன் கொண்ட 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.06 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 23.08 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5.03 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஸ்காலா காரின் உற்பத்தி சென்னை ஆலையில் நிறுத்தப்பட்டுள்ளது என்று வெளியானத் தகவலை ரெனோ கார் நிறுவனம் மறுத்துள்ளது.

Most Read Articles

English summary
French car maker Renault has launched an updated version of its compact car Pulse, with prices starting at Rs 5.03 lakh (ex-showroom Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X