கூடுதல் வசதிகளுடன் டாடா ஸெஸ்ட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

Written By:

கூடுதல் வசதிகளுடன் கூடிய டாடா ஸெஸ்ட் காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டாடா ஸெஸ்ட் காரின் டாப் வேரியண்ட்டாக இது விற்பனை செய்யப்பட உள்ளது.

டீசல் மாடலின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த டாப் வேரியண்ட்டில் இருக்கும் வசதிகள் மற்றும் விலை உள்ளிட்ட விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய வேரியண்ட்

புதிய வேரியண்ட்

டாடா ஸெஸ்ட் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடல் தற்போது எக்ஸ்எம்ஏ என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகள் கொண்ட வேரியண்ட்டை அளிக்கும் வகையில், எக்ஸ்டிஏ என்ற இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

வசதிகள்

வசதிகள்

  • டில்ட் ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட்மென்ட்
  • ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல்
  • ரியர் பார்க்கிங் சென்சார்கள்
  • எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள்
  • புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள்
  • பகல்வேளை ரன்னிங் விளக்குகள்
  • எல்இடி டெயில் லைட்டுகள்
  • ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • ரியர் டீஃபாகர்
  • டிரைவர் இருக்கையை வசதிகேற்ப கூட்டி குறைப்பதற்கான அட்ஜெஸ்ட்மென்ட் வசதி ஆகியவை இந்த புதிய வேரியண்ட்டில் நிரந்தரமான சிறப்பு வசதிகளாக இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள்

9வது தலைமுறை ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

இபிடி பிரேக் தொழில்நுட்பம்

கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல்

எஞ்சின் இம்மொபைலைசர்

ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக்ஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

டாடா ஸெஸ்ட் டீசல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும் 1248சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

புதிய வேரியண்ட் விலை

புதிய வேரியண்ட் விலை

ரூ.8.42,826 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டாடா ஸெஸ்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 
English summary

 The Zest from Tata Motors will be offered to customers as a XTA trim option as a top-end compact sedan. It will be powered by the same diesel engine and gets the popular AMT gearbox. This new variant of Zest has been priced at INR 8,42,826 ex-showroom, Mumbai.
Story first published: Tuesday, March 10, 2015, 10:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark