பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ கார் அறிமுகம்!

By Saravana

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ கார் டீசல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய 1.2 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலிலும் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Volkswagen Cross Polo
 

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 110என்எம் டார்க்கையும் வழங்கப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது. லிட்டருக்கு 16.47 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பெட்ரோல் மாடல் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், டியூவல் ஏர்பேக்ஸ், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் வசதி, கருப்பு நிற இன்டிரியர் போன்ற அம்சங்கள் கொண்டதாக கிடைக்கும். மேலும், புதிய அலாய் வீல் செட், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய கிராஸ்போலோ கார் ரூ.6.94 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு இன்று முன்பதிவு துவங்கியுள்ளது.

Most Read Articles

English summary

 Volkswagen India now announce the launch of their 2015 Cross Polo with a 1.2 MPI, petrol engine. The German manufacturer has opted to offer their new model with a new engine at an attractive price of INR 6,94,000 ex-showroom, Mumbai.
Story first published: Thursday, January 15, 2015, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X