இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்... இந்த வெளிநாடுகளில் கார் ஓட்ட அனுமதியுண்டு!

By Saravana

சுற்றுலா, பணி நிமித்தமாக தற்போது வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. சுற்றுலா செல்பவர்கள் வாடகை கார்களை பணியமர்த்திக் கொள்வதில் சிரமமில்லை. ஏனெனில், அதிகபட்சமாக ஒரு வாரத்தில் அவர்களது சுற்றுலா முடிந்துவிடும்.

ஆனால், பணி நிமித்தமாக அயல்நாடுகளில் மாதக்கணக்கில் அல்லது ஆண்டு கணக்கில் தங்க நேரிடும்போது சொந்த வாகனம் வைத்துக் கொள்வதே வசதியாக இருக்கும். ஆனால், அந்தந்த நாட்டு ஓட்டுனர் உரிமம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். திக்குதெரியாத இடத்தில் போய் இறங்கியவுடனே இதனை பெறுவது எளிதன்று. இந்தியர்கள் அதிகம் செல்லும் பல வெளிநாடுகளில் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்துக் கொண்டே கார் அல்லத மோட்டார்சைக்கிள்களை ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு, இந்திய டிரைவிங் லைசென்ஸிற்கு அனுமதி தரும் வெளிநாடுகளின் பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

01. ஜெர்மனி

01. ஜெர்மனி

ஜெர்மனியில் நுழைந்த நாள் முதல் 6 மாதங்களுக்கு இந்திய லைசென்ஸை வைத்துக் கொண்டு கார், பைக் ஓட்ட முடியும். ஆனால், உங்களது டிரைவிங் லைசென்ஸின் மொழியாக்கம் செய்யப்பட்ட நகலை தூதரகத்திலிருந்து பெற்றுக் கொள்வது அவசியம். இல்லையெனில், சர்வதேச ஓட்டுனர் பர்மிட் இருந்தால் பிரச்னை இல்லை. வேக வரம்பு இல்லாத ஆட்டோபான் சாலைகளில் காரில் ஒரு சூப்பரான டிரிப் அடித்து வர இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Picture Credit: Wiki Commons

02. ஆஸ்திரேலியா

02. ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார், பைக் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், உங்களது பாஸ்போர்ட்டும், டிரைவிங் லைசென்ஸும் ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். அத்துடன் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் இருக்க வேண்டும்.

03. சுவிட்சர்லாந்து

03. சுவிட்சர்லாந்து

பலரின் கனவு சுற்றுலா பிரதேசமாக விளங்கும் சுவிட்சர்லாந்து நாட்டிலும் ஓர் ஆண்டுக்கு தாய் நாட்டு டிரைவிங் லைசென்ஸை வைத்து கார், பைக் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. அங்குள்ள செயின்ட் கோத்தார்டு கணவாய்க்கு ஒரு ரவுண்டு செல்ல மறவாதீர்.

Photo Credit: Wiki Commons

04. நியூஸிலாந்து

04. நியூஸிலாந்து

நியூஸிலாந்து நாட்டிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸ் வைத்து வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதியுண்டு. அங்குள்ள தேம்ஸ் பகுதியிலிருந்து கோரமென்டெல் சாலையில் பயணிக்க தவறாதீர்.

Photo Credit:Backpackerdeals

05. மொரிஷியஸ்

05. மொரிஷியஸ்

மொரிஷியஸ் தீவிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.

Photo Source

06. பிரான்ஸ்

06. பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டிலும் இந்திய ஓட்டுனர் உரிமத்துக்கு அனுமதி உண்டு. ஆனால், உங்களது டிரைவிங் லைசென்ஸை இந்திய தூதரகம் மூலமாக பிரெஞ்ச் மொழியில் மொழியாக்கம் செய்து கொள்வது அவசியம். அங்குள்ள கார்சிகா மலைப்பகுதி சாலையில் உங்களது ஓட்டுனர் திறனுக்கு சவால் விடும் சாலைகளில் பயணிக்க தவறாதீர்.

07. நார்வே

07. நார்வே

உலகின் அழகிய பிரதேசங்களில் ஒன்றான நார்வே நாட்டிலும் இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் வாகனங்களை இயக்க முடியும். மூன்று மாதங்களுக்கு மட்டும் இந்த அனுமதி. நடுராத்தியில் சூரியன் உதிக்கும் நாடு என்று பெருமையுடைய நார்வேயின் இயற்கை அழகை காண செல்லும் இந்தியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

08. இங்கிலாந்து

08. இங்கிலாந்து

இங்கிலாந்தில் ஓர் ஆண்டுக்கு இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் கார், பைக்குகளை ஓட்ட முடியும். சரி, இங்கிலாந்து புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கும் ஆட்டோமொபைல் பிரியர்கள், ஐலே ஆஃப் மேன் சாலையில் பயணிக்க தவறாதீர். இங்கு வேக வரம்பு இல்லை என்பதையும் மனதில் வையுங்கள்.

Photo Credit:John Mallaney

09. அமெரிக்கா

09. அமெரிக்கா

சொந்தக்காரர், நட்பு வட்டத்தில் விசாரணையை போட்டால் முக்கால்வாசி பேரின் வீட்டில் ஒருவராவது அமெரிக்காவில் இருப்பதாக சொல்கின்றனர். எனவே, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு மிக நெருக்கமாகிவிட்டது. எனவே, சுற்றமும், நட்பும் வட்டாரத்தை வைத்து சுற்றுலா சென்றாலும், பணி நிமித்தமாக சென்றாலும் இந்திய ஓட்டுனர் உரிமத்திற்கு ஓர் ஆண்டு அனுமதி உண்டு. ஆனால், சர்வதேச ஓட்டுனர் பர்மிட்டும் அவசியமாகிறது. அங்குள்ள ரூட்-66 சாலையில் செல்ல தவறவிடாதீர்.

Photo Credit:Worldchoicesports

10. தென் ஆப்ரிக்கா

10. தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்காவிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸிற்கு அனுமதியுண்டு. ஆனால், ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.

Image Source

11. இதர நாடுகள்

11. இதர நாடுகள்

இதுதவிர, ஸ்பெயின், கனடா, இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய டிரைவிங் லைசென்ஸிற்கு அனுமதியுண்டு. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரங்களை அணுகி வழிமுறைகளை தெரிந்து கொள்வதுடன், குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்றவுடன் அங்குள்ள இந்திய தூதரகங்களிலும் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை தெரிந்துகொண்டு செல்வது அவசியம்.

ரிஸ்க்

ரிஸ்க்

வெளிநாட்டில் கார் ஓட்டுவது பரவசத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அங்குள்ள சாலைகள் தட அமைப்பு, இடது புற ஸ்டீயரிங் வீல் அமைப்பு, சாலை விதிகள், சாலை நிலைகள் போன்றவற்றை உணர்ந்து கொள்வதில் சிரமங்கள் உண்டு. எனவே, ஓரளவு பரிட்சயமான இடங்களிலும், வழிகாட்டியை வைத்துக் கொள்வதும் பயன் தரும்.

இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட்

இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட்

IDP என்று குறிப்பிடப்படும் இந்த ஓட்டுனர் பர்மிட் பெறுவதற்கு ரூ.500 கட்டணமாக இருக்கிறது. ஓர் ஆண்டுக்கு இது செல்லத்தக்கதாக இருக்கும். இதனை பெறுவதற்கு 30 நாட்கள் பிடிக்கும் என்பதையும் மனதில் கொள்க. மேலும், கைவசம் 5 முதல் 10 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும், பாஸ்போர்ட் நகல்களையும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி?

 
Most Read Articles

English summary
Here is the list of 10 countries which allow you to drive with Indian driving license.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more