டூ வீலர் கற்றுக் கொள்ளும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

Written By:

இப்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு மிகவும் உகந்த ஒரே போக்குவரத்து சாதனம் டூ வீலர்கள்தான். ஓர் இடத்திற்கு மிக விரைவாக சென்றடைவதற்கும், குறைவான எரிபொருள் செலவீனம் கொண்டதாக இருப்பதால் டூ வீலர்களின் பயன் மிக இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

கார் ஓட்டுபவர்கள் கூட போக்குவரத்து நெரிசலில் கால் கடுத்து ஓட்டுவதை தவிர்க்க, டூ வீலர்களில் செல்வது கண்கூடு. எனவே, ஆண், பெண் என இருபாலரும் தற்போது டூ வீலர்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். முதல்முறையாக டூ வீலர்களை கற்றுக் கொள்ளும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 பயிற்சி பள்ளி

பயிற்சி பள்ளி

முதல்முறையாக டூ வீலர்களை கற்றுக் கொள்பவர்கள் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு சென்று கற்றுக் கொள்வது சாலச் சிறந்தது. பெண் பயிற்றுனர் உள்ள பள்ளிகளும் செயல்படுவதால், பெண்கள் எளிதாகவும், முறையாகவும் கற்றுப் பயில்வதற்கு இப்போது வாய்ப்புகள் அதிகம்.

LLR அவசியம்

LLR அவசியம்

டூ வீலர் ஓட்ட பயில்வதற்கு முன் எல்எல்ஆர் எனப்படும் பயிற்சி ஓட்டுனர் உரிமத்தை ஆர்டிஓ அலுவலகத்தில் பெறுவது அவசியம்.

 பதட்டப்படாதீங்க...

பதட்டப்படாதீங்க...

பதட்டத்தை தணித்து மனதை நிதானமாக வைத்து ஓட்டும் முறைகளை பழக வேண்டும். பதட்டப்பட்டால் நிச்சயம் கற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுவதுடன், விபத்துக்களுக்கும் வழிகோலும்.

கன்ட்ரோல்

கன்ட்ரோல்

சைக்கிள் ஓட்டத் தெரிந்தாலும், டூ வீலரின் கன்ட்ரோல் வேறு மாதிரி இருக்கும். ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிளின் பிரேக், ஆக்சிலரேட்டர், கியர் ஷிப்ட் ஆகியவற்றை பற்றி தெளிவாக புரிந்து மனதில் பதிய வைக்க வேண்டும்.

டூ வீலர் மாடல்

டூ வீலர் மாடல்

குறைவான சக்திகொண்ட மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டரில் பயில்வது நலம். வீட்டில் அதிக சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் இருந்தால் அதைவிடுத்து, குறைவான சக்திவாய்ந்த டூ வீலர்களையே தேர்வு செய்து ஓட்டுங்கள். கையாள்வதும், கட்டுப்படுத்துவதும் எளிதாக இருக்கும்.

பாதுகாப்பு கவசங்கள்

பாதுகாப்பு கவசங்கள்

டூ வீலர்களை பயிலும்போது ஹெல்மெட், முழங்கை மற்றும் காலுக்கான நீ பேட் [எல்போ கார்டு], ரைடிங் ஜாக்கெட், கையுறைகளை அவசியம் அணியுங்கள். கீழே விழுந்தாலும் சிராய்ப்புகளை தவிர்க்கலாம். குறிப்பாக, பெண்கள் சவுகரியமான உடைகளை அணிவது அவசியம். புடவை, டைட் ஜீன்ஸ் போன்றவற்றை தவிர்த்து சுரிதார் அணிந்து ஓட்டுவது உத்தமம்.

 வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

எந்தவொரு விஷயத்திலும் வழிகாட்டுதல் இருப்பது அவசியம். டூ வீலர் ஓட்டுவதற்கும் இது பொருந்தும். நல்ல வழிகாட்டுதல் இருந்தால் சுலபமாக, விரைவாக பயில உதவும். தவறுகளை சுட்டிக் காட்டி, முறையாக ஓட்டுவதற்கான ஆலோசனைகளை அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வது அவசியம்.

எங்கே ஓட்டுவது?

எங்கே ஓட்டுவது?

டூ வீலர் கற்றுக் கொள்பவர்களுக்கு காலியான மைதானம் மற்றும் பெரிய பார்க்கிங் லாட்டுகள் சிறந்த இடமாக இருக்கும். பொது சாலைகளில் ஓட்டி பழகுவதை தவிர்க்கவும். சமயத்தில் இது விபத்துக்கு பாதை அமைத்துவிடும்.

பிரேக்

பிரேக்

சைக்கிள் ஓட்டி மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு கியர் பைக்கை ஓட்டும்போது பல்வேறு கட்டுப்பாட்டு அம்சங்களை தெரிந்து கொள்வது அவசியம். அதில் ஒன்று பிரேக் சிஸ்டம். ஸ்கூட்டர்களில் இடது பக்கம் பின்புற பிரேக்கும், வலது பக்கம் முன்புற பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். மோட்டார்சைக்கிளில் பின்புற பிரேக்கை வலது கால் மூலமாகவும், முன்புற பிரேக்கை வலது பக்க கைப்பிடியின் மூலமாகவும் கட்டுப்படுத்தும் வகையில் இருக்கும்.

கிளட்ச்

கிளட்ச்

மோட்டார்சைக்கிள்களில் மேனுவலாக கியர் மாற்றம் செய்யும் வண்டிகளில் க்ளட்ச் லிவர் இடதுபக்க கைப்பிடியில் கொடுக்கப்பட்டிருக்கும். க்ளட்ச்சை பிடித்துக் கொண்டு முதல் கியரை மாற்றுங்கள். க்ளட்ச்சை மெதுவாக ரிலீஸ் செய்யும்போது எந்த இடத்தில் இருந்து மோட்டார்சைக்கிள் நகர்கிறது என்பதை கணித்துக் கொள்ளவும். ஓரிரு நாளில் இந்த கன்ட்ரோல் தெரிந்துவிடும். அதன்பிறகு ஒவ்வொரு கியரை மாற்றும்போது க்ளட்ச்சை பிடித்து விட வேண்டும்.

 கியர் மாற்றம்

கியர் மாற்றம்

மோட்டார்சைக்கிளின் இடது புறத்தில் கியர் ஷிப்ட் லிவர் கொடுக்கப்பட்டிருக்கும். மோட்டார்சைக்கிளுக்கு தகுந்தவாறு 4, 5 மற்றும் 6 கியர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், ஒவ்வொரு மோட்டார்சைக்கிளுக்கும் கியர் மாற்றும் முறை வெவ்வேறு விதமாக இருக்கும். அதனை கேட்டுத் தெரிந்துகொண்டு பயிலுங்கள்.

 தொடர் பயிற்சி...

தொடர் பயிற்சி...

ஒவ்வொரு முறையும் க்ளட்ச்சை பிடித்துக் கொண்டு முதல் கியரை மாற்றவும். மெதுவாக க்ளட்ச்சை ரிலீஸ் செய்து வண்டியின் பேலன்ஸை புரிந்துகொள்ளுங்கள். பின்னர் அடுத்தடுத்த கியர்களில் மாற்றி மெதுவாக ஓட்டுவதற்கு பழகுங்கள்.

அவசரப்படாதீங்க!

அவசரப்படாதீங்க!

சில நாட்கள் பயிற்சியில் ஓரளவு கன்ட்ரோல் தெரிந்துவிடும். மெதுவாக உங்களது தெருவிலேயே ஓட்டி பழகுங்கள். அதன் பின்னர், பொதுச் சாலைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவரின் உதவியுடன் ஓட்ட பழகிக் கொள்ளுங்கள். தொடர் பயிற்சி மூலம் சிறப்பாக ஓட்ட பழக முடியும். நம்பிக்கையுடன் இன்றே துவங்குங்கள்.

வாழ்த்துகள்!

  

English summary
Here is a quick guide to start riding one. For the ones who feel they are too old to start riding, it's never too late. So once you have a two wheeler learners licence, just follow these easy steps:
Story first published: Tuesday, March 17, 2015, 12:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark